பக்கம்:தாய்மை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 29

தாமே! மணநீக்க்த்துக்கும் மகப்பெறா நிலைக்கும் எத்தனை யோ காரணங்களைக் காட்டுவர். ஆயினும் அவையாவும் வாழ்வொடு பொருந்தாது, பொருளாதார அடிப்படை அல்லது அழகு கெடாத அடிப்படையில்தானே முடியும் அவ்வாறு வாழ்வதால் இரண்டையும் அவர்கள் நிறைவு செய்து வாழ முடிவதில்லை. அதற்கு மாறாகப் பலர் கள்ளத்தனமான காம வாழ்வினைக் கொண்டு கருச் சிதைவும் செய்கின்றனர். ஆகவே அவர் உண்மை விரும்பும் ஒன்றை-துாய தெய்வத் தன்மை வாய்ந்த ஒன்றை-மக்கள் மணமறிந்து மறைத்து வஞ்சித்து வாடி வருந்துகின்றனர். என்பது தெளிவு. -

உலகில் பிறந்தது வாழ்வதற்காகவே. வாழ்க்கை வாழ் தெற்கேயன்றி வறண்டு .ெ க டு வ த ற் கா க வ ன் ேற. அதனாலேயே தெய்வங்களைக் காட் டு ம் நமதி முன்னோர்கள் சக்தியாகிய பெண்மையையும் அதனொடு பொருந்திய தாய்மையையும் இணைத்தே காட்டுகின்றனர். பலவற்றை மேலே கண்டோமல்லவோ! தாய்மை இன்றேல் தாங்களே இல்லை என்பதை முதலில் இவர்கள் உணர வேண்டும். உலகம் என்றென்றும் செம்மை வாழ்வில் திளைக்க வேண்டுமானால் தாய்மையே அதற்கு அ49 படை. இந்த உண்மை ஞானம் கைவரப்பெற்றால் வேறு எதுவும் நமக்குத் தேவையில்லை. இன்று உலகில் இந்தி உணர்வு அரும்பாமையால்தான் வீட்டுக்குவீடு, நாட்டுக்கு நாடு பல தொல்லைகள் உண்டாகின்றன. மக்களைப் பெற்றவர்கள் அத்தாய்மை உள்ளத்தோடு உலகை நோக்க வேண்டும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற அடிப்படையில் ஒவ்வொருவரும் நம் வழித்தோன்றல் களே-எல்லோரும் உறவினரே என்ற உணர்வு அரும்பல் வேண்டும். மக்கள் மட்டுமன்றி எல்லா உயிர்களுமே நம் உறவினத்தார் என்ற உணர்ச்சி இத் தாய்மையில் அரும்புவதே, பாரதி ஆணாகப் பிறந்தும் இத் தாய்மை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/31&oldid=684792" இலிருந்து மீள்விக்கப்பட்டது