பக்கம்:தாய்மை.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தாய்மை

உணர்ச்சி பெற்றமையாலேயே காக்கை குருவி எங்கள் சாதி’ என்று விண்ணதிரப் பாட முடிந்தது. எனவே உலகம் செழிக்க வேண்டுமானால் - வையம் வாழ வேண்டுமானால் - வாய்மை நிலைக்க வேண்டுமானால் தாய்மை போற்றப்பெற வேண்டும். தாய்மை என்னும் தெய்வ நிலை நாம் விரும்பினும் விரும்பாவிடினும் என்றும் இறவாது வாழும் ஒன்றுதான். நாம் செய்ய வேண்டுவதெல்லாம் அதன் செம்மையை மதித்து அதன் உணர்வு நெறியைப் போ ற் றி மதித்து மேம் படுத்தலேயாகும். உலக மக்கள் - சிறப்பாக மகளிர் இத்தாய்மை உணர்வில் ஒன்றி உயர்வார்களாயின் உலகம் என்றென்றும் இன்பக் கோயிலாகத் திகழும். அந்தத் தெய்வ நெறிக்கு வையம் சேர்ந்து பாடுபடுவதாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/32&oldid=684794" இலிருந்து மீள்விக்கப்பட்டது