பக்கம்:தாய்மை.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அறிவியலின் அழிவும் தோற்றமும் 45

அழியப்போகிறது-உலக நாகரிகங்களுள் ஒன்றல்லவா அழியப்போகிறது. உலகமாகிய உடலின் உறுப்புகளில் ஓர் உறுப்பை அழிக்க மற்றொரு உறுப்பு முயலும் முறை யன்றோ இது என்று வருந்திக் கூறினார். எனவே இந்த அழிவுக்குப் பயன் படும் ஆயுதங்கள் மனித சமுதாய வாழ்வின் அங்கங்களை ஒவ்வொன்றாகச் சிதைந்து, கொன்று, குழிதோண்டிப் புதைத்து, நாடுகளை-உலகை ஒன்று மற்ற சூனியமாக்க தானே உதவப்போகின்றன. வல்லரசுகளை எண்ணிப்பார்த்துச் செயலாற்ற வேண்டு கிறேன். ஏற்பார்களா என் வேண்டுகோளை?

இன்றைய இக்கொடிய ஆயுதங்களெல்லாம் நமக்குப் புதியவை அல்ல. நம் புராண இதிகாசங்களில் இவை பற்றி யெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறோம். அக்னி யாஸ்திரம்’ வருணா ஸ்திரம் வாயு வாஸ்திரம்’ என்றும் இன்னும் பல வகையானும் அழிவுக்கு வழிகாட்டும் ஆயுதங்கள் நாம் அறிந்தவையே. எங்கோ இருக்கும் எதிரியை வாள் கொண்டு-வேல்கொண்டு-கடலையும் வ ற் ற ச் செய்து கதிரவனையும் கதி கலங்கச் செய்து போர் புரியும் சக்தி களையெல்லாம் நாம் அறிவோம். -

சூரபதுமனை அழிக்க, தேவர்கள் வேண்டியபோது சிவன் தானே அழிக்காது முருகனைத் தந்து, தம் சக்தியையே வேலாகக் கொடுத்து அந்தச் சக்தியே சூரனை அழிக்க உதவும் என வழியனுப்புகிறார். முருகனும் அந்தக் சக்தியாகிய வே லா ல்ே யே மாற்றாரைச் சாடி வெற்றி கொள்கிறான். ஆகவே அந்தச் சக்தி’ ஒன்றே இன்றும் உலகை அழிவுப் பாதைக்கு நம்மை ஈர்த்துச் செல்லுகின்றது. தம் நாட்டிலும் சக்தியாகிய கொற்றவையையே அழிக்கும் காளியாக-துர்க்கையாகபிறவாகக் காண்கின்றனர். ஆம்! அந்தச் சக்தி நாட்டிலும் உலகிலும் கொடுமை மிகுகின்ற காலத்தில்-நல்லவர் வாழ அல்லவர் வாட நேர்ந்த காலங்களில் தன்-மூழுப் பலத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/47&oldid=684821" இலிருந்து மீள்விக்கப்பட்டது