பக்கம்:தாய்மை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 . தாய்மை

இங்கே வா! இதோ இத் தேனைப் பார் - நுகர் - மகிழ்’ எனக் கூறி மணிவாசகர் அழைக்கின்றார். ஆனாலும் அவர் கிளியையும் குயிலையும் அவ்வாறு சிறப்புச் சொல் சேர்த்து அழைக்கவில்லையே எனலாம். ஆனால் அவர் அவற்றிற்கு அவ்வப் பத்துக்களில் இட்ட சிறப்பு அடை மொழிகளைப் போன்று வண்டிற்கு வேறு எந்தச் சிறப்பு அடைமொழியும் இடவில்லை என்பதைப் பயில்வார் அறிவர். எனவே கோத்தும்பி என அவர் அழைத்தது முற்றும் பொருந்துவதாகும்.

அரச வண்டினை அழைத்து அருளாளர் என்ன சொல்கிறார்? இரு பது பாடல்களையும் உற் று. ஆராய்வாருக்கு இப்பகுதியின் உயர்வு நன்கு விளங்கும்: ஒவ்வொரு பாடலிலும் ஒவ்வொரு வகையில் தான் பெற்ற இன்பத்தை-இறையருள்ை உலகம் பெறவேண்டும் என்ற பெருவிருப்பால் காட்டாதனவெல்லாம் காட்டியருளும் அவர்தம் நல் உள்ளம் நன்கு விளங்கும். ஆன்மாவையே வண்டாக இங்கே உருவகம் செய்துள்ளார் எனவும் கூறுவர். அப்படியே கொண்டாலும் தவறில்லை. வண்டும் ஓர் ஆன்மா அல்லது உயிர். ஆதலாலும் உயிர் நிலையில் இரண்டிற்கும், எந்த வேறுபாடும் இல்லையாதலாலும் எவ்வாறு கொள்ளினும் பொருத்தமாகவே அமையும். அரச வண்டை அழைத்த அண்ணலார் அதன் முறையான தினைத்துணை உள்ளதோர் பூவினில் தேன் உண்ணும்’ வாழ்விலிருந்து மாற்றி - அற்ப சுகத்திற்கு அல்லலுறும் உயிர்களைத் தெளிவுபடுத்தி-நித்திய இன்ப வாழ்வாம் இனிய தேனினை-வாழ்வினை நுகருமாறு வேண்டுகிறார். அவர் கூறுவதை சற்றே கூர்ந்து நோக்குவோமா!

இப்பகுதி தில்லையில் அருளப்பெற்றதென்பதும் இது சிவனோடு ஐக்கியம்’ பற்றியது என்பதும் தலைப்பால் உணரப்பெறுகின்றன. எனினும் தில்லையைப் பற்றிய குறிப்பு அதிகமாக வரவில்லை. ஐயா என். ஆருயிரே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/56&oldid=684838" இலிருந்து மீள்விக்கப்பட்டது