பக்கம்:தாய்மை.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்கோத்தும்பி 67

பரமுக்தியான முதல் அல்லவா இறைவன். அத்துடன் இக்கோலமே தொன்மைக் கோலம் எனவும் குறிக்கின்றார். இப் பழம்பெரும் கோலத்திலிருந்தன்றோ அனைத்தும் தோன்றின. எச்சமயத்தோர் சொல்லும் இதில் தானே சென்று முடியவேண்டும். . . .

அவனை அடைந்ததால் அதுவரை வையவாழ்வில் பெற்ற துன்பங்களெல்லாம் கழிந்தன. அதுதானே பயனும்கூட. உள்ளத் துறுதுயர் ஒன்றோழியா வண்ணம்: எல்லாம் தெள்ளும் . நீக்கும் - தெளிவாக்கும் - துயர்களை முற்றும் நீக்கித் தெளிவு பெறும் செயல் செய்வது அவரின் கழல் தானே. அந்தக் கழலாகிய மலரில் தெளிந்த தேனை உண்ணுமாறு வண்டினிடம் கூறுகின்றார். அதன் முன் மறுபடி அவன் தன்னை ஆட்கொண்ட நிலை நினைவுக்கு வருகின்றது. தான் கள்ளனாக கடுமை உடையவனாக . தீயவனாக இருக்க அவற்றையெல்லாம் நினையாது தன் உள்ளத்தில் இறைவன் வந்த தன்மையை எண்ணி அவனை வள்ளல் என்கின்றார். வள்ளன்மை உடையவருக்கன்றோ எதையும் பாராது வாரி வழங்கும் பண்பு உண்டாகும். அப்படி அவன் உள்ளத்தே அவன் நிலை பெற்றமையாலே தான் தன் உள்ளத் துறுதுயர் ஒன்றும் இல்லாது தெளிவு பெற்றது என்கின்றார். அவர் நிலைத்துநின்ற தன்மையினை வள்ளல் வரவர வந்து ஒழிந்தான் என்கின்றார். இறைவன் மெல்ல மெல்ல மெல்ல.வரவரவர - கடைசியாக முற்றும் வந்து மறுபடியும் மேலும் வருவதற்கு இடமில்லாவகையில். மேலும் வரத் தேவையில்லா வகையில் உள்ள தன்மை பினையே வந்து ஒழிந்தாள் எனக் குறித்து மேலும் வர வேண்டிய நிலையின்றி ஒன்றாகிச் செயலற்றுச் சிறந்து தன்னுடன் கலந்தான் எனச் சொல்லுகின்றார். மேலும் அவர் வரவேண்டிய நிலையில்லா வகையில்-செயலற்றுத் தன்னுள் நிறைந்தான் என்பதே அதன் பொருளாகும். -%a:/95) pgj gT 6r_1 35 f@ “ceqse from action” 67 67 pb “gpu • என்றும். வின்ஸ்லோ உரை எழுதுகின்றார். எனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/69&oldid=684863" இலிருந்து மீள்விக்கப்பட்டது