பக்கம்:தாய்மை.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 தாய்மை

இனி, இது இல்லை அது இல்லை’ எனச் சொல்லின் எதுதான் உண்மை என்ற வினாவிற்கு விடை காண்போம். சாதாரணமாக ம னி த ைன ச் சுட்டும்போதோ ஒரு பொருளைச் சுட்டும்போதோ அது-இது; அவன்-இவன்’ என்று அவன் தோற்றத்தையும் இயல்பையும் சுட்ட முடியும். கடவுளும் அப்படிச் சுட்டப் பெறுவாரானால்’ அப்புறம் அவருக்குத் தெய்வத்தன்மை ஏது? அவன் இதோ இந்தப் பெயரில்தான் இருப்பான் என்றாலோ அவனை அடைய இவர் பின்னால் செல்வதுதான் ஒரே வழி? என்றாலோ அது முடிவிலா ஆற்றலுடைய முழுமுதலுக்கோ அவனை அடையும் நெறிக்கோ இழுக்காகும் அல்லவா. அது அன்று’, ‘இது அன்று’ என்று சொல்லும்போது ஒரு குறிப்பிட்ட-மனிதனைப் போன்றோ வேறு பொருளைப் போன்றோ சுட்டிக்காட்டக் கூறிய ஒரு பொருளாகி அதுவும் இச் சாதாரணப் பொருளாகிவிடும். அதனால் ‘அதி அன்று இது அன்று; அவற்றிற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒன்று, எனக் குறிக்கிறது நம் சமயம். அப்படி எங்கோ இருக்கும் அதனால் நமக்கு என்ன பயன்? அச் சமயத்தை நாம் ஏன் போற்ற வேண்டும்? என்ற வினாக்கள் உடனே எழலாம். அதற்குப் பரஞ்சோதியார் நல்ல பதிலைத் தந்துள்ளார். அதற்குமுன் மற்றோர் உதாரணத்தைக் காண்போம். காற்றைத் தலையணையில் அடைத்து இதுதான் காற்று-இதனால் எவ்வளவு சுகமாகத் தூக்கம் வருகிறது என்றும், இதுதான் காற்று; இது இந்தச் சக்கரத்தில் புகுந்து இந்த சைகிளையோ மோட்டாரையோ எவ்வளவு வே க ம ா க ட செ ல் வோ ரு க் கு த் தொல்லையில்லா வகையில் செல்கிறது என்றும் சொல்வார் களா? காற்று அதனுள் இருக்கிறது என்பது உண்மை ஆனால் அதுவே, காற்றால்-முற்றமுடிந்ததாகி விடுமா. காற்று எல்லையற்றது-அத்ை தலையணை முதல் உயர்ந்த இயந்திரங்களை இயக்கும் நிலைவரையில் பயன்படுத்து கின்றனர். அதனின்றும் மே லா.க எண்ணத்தக்கவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/78&oldid=684880" இலிருந்து மீள்விக்கப்பட்டது