பக்கம்:தாய்மை.pdf/86

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

84 - தாய்மை

கின்ற நிலையிலே, தோடர் போன்ற தமிழகக் குடிமக்கள் தமக்கு வாழ்வளித்த எருமையினைத் தெய்வமாகப் போற்றும்தன்மையினைக்காண்கிறோம். நல்லதன் நலனும் தீயதன் தீமையும் மனித அறிவு உணரத் தொடங்கிய அந்தக்காலம் எதுவாயினும் அதுவே இந்த வழிபாட்டுக்கு s dugol_nurgh, (Therston – Castes and Tribes of South.india) எல்லா அறிவும் நம்பிக்கையாகாது; ஆன்ால் எல்லா நம்பிக்கையும் அறிவின் பாற்பட்டனவே என ஆங்கிலப் பேரகராதி (Encyclopedia Vol. 3) கூறுவது போன்று, முன் அச்சம் காரணமாக எழுந்த நம்பிக்கையும் தம்மை வாழவைப்பவை காரணமாக எழுந்த நம்பிக்கையும் அறிவின் முதற் கூறுகளாகக் கொள்ள அமையும். பின் மெல்ல அறிவும் நம்பிக்கையும் வளர வளரப் பக்தி இயக்கம் பல வகையில் வளர்ச்சியுற்றது. -

ஒரு காலத்தில் பக்தி, மூடபக்தி'யாக - வைராக்கிய பத்தி யாக அமையத் தொடங்கியது. தம்மையே தீயிடைப் புகுத்தல் - கடுந்தவம் இயற்றல் போன்றவையும் செதில் குத்தல் - உறுப்பழித்தல் போன்றவையும் பக்தியாகக் கருதப்பெற்றன. இவற்றின் சாயல்கள் இன்றும் உலகில் ஆங்காங்கே நிலவியுள்ளதன்மையினைக் காணமுடிகின்றது.

இயில் வீழ்கிலேன் திண்வரை உருள்கிலேன்’ என்று

மணிவாசகர் இதுபற்றித்தான் கூறினாரோ என எண்ண வேண்டியுள்ளது. மக்களைப் பலியிடும் வழக்கமும்

பக்தியின்பாற்பட்டதாகவும் கருதப்பட்டது. எனினும் அவை பெருப்பாலும் அறிவும் நாகரிகமும் முதிர்ச்சி அடை

யாத மக்கள் மேற்கொண்ட பக்தியாகக் கருதப்பெற்றன.

தொல்காப்பியப் புறத்திணை இயல், புறப்பொருள் வெண்பா மாலை போன்றவற்றில் வரும் களவேள்வி,

கொற்றவை நிலை, உண்டாட்டு போன்றவையும் பிறவும் வெற்றி பெற்ற நிலையில் தம்மையே கடவுளுக்குப் பக்திப் பரிசாகத் தரும் இத்தகைய வைராக்கியப் பக்தியை நமக்கு

உணர்த்துவனவாகும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாய்மை.pdf/86&oldid=684895" இலிருந்து மீள்விக்கப்பட்டது