பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை "இல்லை; நம் உண்மைக் காதலைப் போல!" 9 "கைகாரியடி சுழற்கண்ணி நீ! கட்டிலறையிலே அர சனிடம் கூட இப்படித்தானே கதையளப்பாய்!" "எனக்கு இரண்டு இருக்கிறது அத்தான், இருத யம்! ஒன்றில் உமது ஆசை! மற்றொன்றில் சுந்தரபுரி யின் சிம்மாசனத்தைப் பற்றிய கனவு! இரண்டாவது இருதயத்தால்தான் அரசனைப் புகழ்கிறேன் - ஆராதிக்கி றேன் - ஆனந்தம் பொழிகிறேன்!" "சுழல்! நேரமாகிறது, வருகிறேன் அதோ அரசர் வருவதுபோல் தெரிகிறது!" "விடியற்காலை! திட்டம்-மறந்துவிடாதீர்!" "விருந்து! அதையும் நீ மறந்துவிடாதே!" சுழற்கண்ணி, அவன் பேச்சை ஆமோதிப்பது போல தலையசைத்துக்கொண்டு புன்னகை சிந்தினாள். தீட்சண்யனோ அந்த சிரிப்பை ரசித்தவாறு அந்த இடத்தி லிருந்து நகர்ந்தான். தடித்த உதடுகளை அழுத்தமான நாவினால் தடவியபடி ஏதோ ஒரு இன்பச் சுவையை அனுபவித்தவாறு அந்த முரடன் சுழற்கண்ணியின் பார் வையிலிருந்து மறைவதற்கும்-‘சுந்தரீ!’ என்றவாறு சுவைக் காவியம் படிப்பதற்கு அரசன் வருவதற்கும் சரி யாக இருந்தது. மன்னன் வந்தான். தீட்சண்யனிடத்திலே அவள் கூறியவை அனைத்தும் உண்மையே என்பதை நிரூபிப் பது போல் அவள் மடியில் சாய்ந்தான்-பிடியில் சிக்கி னான். .