பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 தாய்மை சுழற்கண்ணி சுந்தரபுரி மன்னனின் இளைய ராணி. அவளுக்கு மைத்துனன் தீட்சண்யன். தூரத்து உறவு. அரண்மனையிலே அவனுக்கு மெய்காப்பாளன் வேலை. அரசனது மெய்காக்கவும் --- ஓய்வு கிடைத்து, கிடைத்து, நேரம் வாய்க்கும்போது சுழற்கண்ணியின் மெய் தழுவிக் கிடக்க வும்-- ஆகிய இரண்டு வேலைகளும் மாறிமாறி வந்து கொண்டிருந்தன அவனுக்கு! கனிரசம் பருக கசக்குமா? அதிலும் அவன் கரடித் திருமேனியன்! தேன்கூடு போல சுழற்கண்ணி, வலிய வலிய வருகிறாள், கொம்பு வளைந்து தேனைக் கொட்டி கரடிக்குப் பசி தீர்ப்பது போல கற்பனை கூடச் செய்ய முடியாது. சுந்தரபுரி அரண்மனை யிலோ இது நித்ய நிகழ்ச்சியாக இருந்தது. டாராங் கல்லை யொத்தக் கரடுமுரடான அவனது மார்பகத்தில் பச்சைக் கிளி போன்றவள் தொத்திக் கிடந்தாள். தரும் பாடிக்கொண்டிருந்தான். .அவனோ, "என் இச்சைக்கினியவளே! இனிப்பு இன்னமுதே!" எனப் பாழ்த்த குரலெடுத்து திரை மறைவில் நடக்கும். இந்த அவமானகரமான அநியாயத்தின் அடையாளமும் தெரியாமல் அரசருக் கரசன் அவளை நோக்கி, "உத்த. மியே! உயர்ந்தவளே! உல்லாசி; ஊர்வசி!" எனப் புகழாரம் தொடுத்துக் கொண்டிருந்தான். . சுந்தரபுரி சாம்ராஜ்யத்தை சுடுகாடாக்க வந்த "வசந்த சேனை" சுழற்கண்ணியின் உருவத்திலே உலவு கிறாள் என்பது அந்த ராஜ ரசிகனுக்கு புரியாமல்தான். போய்விட்டது. அரசனின் அந்தப்புர மயிலாக - ஆலோசனை வழங் கும் அமைச்சாக-களம்புகு நேரத்தில் பின்தொடரும்