பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 11 மறத்தியாக- சுந்தரபுரி மக்களின் சுகத்தைக் கவனிக்கும் பாசமுள்ள தாயாக - அந்த மாளிகையிலே சுடர்விட்டுக் கொண்டிருந்த மாணிக்கமாம் கோப்பெருந்தேவியாரைக் கொந்தளிக்கும் கடலாக மாற்ற வந்துசேர்ந்தது கொடு மையான புயல், சுழற்கண்ணி என்ற பெயரில் ! மன்னனுக்கு ராணியாக இருந்ததேவி, இன்பசாகர னுக்குத் தாயாகவும் மாறிய நேரந்தான், சுழற்கண்ணி யின் படையெடுப்புக்கு ஏற்ற நேரமாகிவிட்டது. முற்றுகை யிட்டாள் முடிசூடியை! உடனே வெள்ளைக் கொடியைப் பறக்கவிட்டான் வேந்தன்; ஆயிரந்தேர் - ஐயாயிரம் காலாள் - ஆனைப்படை - புரவிச்சேனை அத்தனையும் தாக்கினாலும் அசைக்க முடியாது அவன் அரண்மனை க் கோட்டைச் சுவரை! அவளோ, ஒரு விழி வீச்சில், அவ னது மனக் கோட்டையைச் சுக்குநூறாக்கி, நொறுங்கிப் போன ஒவ்வொரு அணுவிலும் நின்றுகொண்டு வெறி யூட்டும் நர்த்தனம் புரிந்தாள். தேவி - இன்பசாகரனோடு, தாய்க்குலத்தின் பெரு மையைத் தரணிக்கு அறிவித்துக் கொண்டிருந்தாள். தேவனே - 'திராட்சையினும் இனியதடி இந்த ரசம்' என இதழ் பருகிக்கொண்டு கிடந்தான் இளையவ ளோடு! அதுவும் அவனுக்குப் புதியவளோடு! கதிர் மறைந்த உலகிற்கு இருள் நீக்கும் நிலவு போல, கோப்பெருந்தேவியின் கவலை படிந்த வாழ்விற்கு வாட்டம் தவிர்க்கும் வைரமாக இன்பசாகரன் திகழ்ந் தான். .