பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I தாய்மை 15 "கற்றுக் கொடம்மா!" என்று குழலை அவளிடம் கொடுத்தான் இளவல். அவளும் குழல் மூலம் பண் எழுப்பினாள். "இனி மை! இனிமை!!" எனப் பாராட்டினர் தோழியர். அந்தப் பண் பாலகனின் மனதையும் கொள்ளை கொண்டது. தானும் அதைக் கற்றுக் கொள்ள வேண்டு மென்கிற ஆர்வம் இளம் நெஞ்சில் கொழுந்துவிட்டது. "எப்படியாவது எனக்கு இந்தப் பண்ணைக் கற்றுக் கொடம்மா!" எனப் பிடிவாதம் செய்தான். அவளும் அந்த வேண்டுகோளைத்தானே அந்தப் பிஞ்சு மனதிலே யிருந்து எதிர்பார்க்கிறாள். இரண்டு நாள் சிரமம் எடுத்துக்கொண்டாள். இள வரசன் பண், பாடமாகி விட்டது! "அருமை தம்பீ அருமை! நான் வாசித்ததைவிட நீ வாசிக்கும்போது, பண்ணிலே மழலையின் இனிமை மறைந்திருந்து பெருமையை அதிகமாக்குகிறது. இந்த கீதத்தை அரண்மனை ஆகா! நந்தவனத்திலே உட் கார்ந்து வாசித்தால் மயில்கள் எல்லாம் தானே வந்து எதிரே நின்று ஆடும்!" என்று சாகசப் பேச்சை தாய்க் குரலிலே கலந்து தந்தாள் சுழற்கண்ணி! "இதோ இப்போதே போய் தோட்டத்தில் வாசிக் கிறேன். தோகை மயில்கள் ஆடுகின்றனவா என்று பார்க்கிறேன்" எனக் குழலுடன் ஓட்டம் பிடித்தான் இளவரசன்.