பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தாய்மை 17 நேரம் பார்த்துக் கொண்டிருந்த கோர மனிதன் தீட் சண்யன், தான் பிடித்து வைத்திருந்த பாம்பை இளவர சனுக்கு அருகேயுள்ள புதரின் பக்கமாக கீழே விட்டான். நோக்கி நகர்ந்தது. விடுபட்ட பாம்பு, குழலோசை தன்னை நோக்கி ஆபத்து ஊர்ந்து வருகிறது என்பதை அறியாத அந்த அழகுப் பிறை நிலவு, சின்னம்மா கற்றுத் தந்த பண்ணை விடாமல் ஊதிக் கொண்டே யிருந்தது. இன்னும் சிறிது நாழிகையில் மயில்கள் எல்லாம் வந்து தன் முன்னே ஆடப் போகின்றன என்ற நினை வோடு, இன்னும்-இன்னும் அதிக உற்சாகத்தோடு குழல் ஒலி புறப்பட்டது! நகர்ந்து வந்த நாகம், படமெடுத்தபடி பாலகனின் எதிரே மயங்கி நின்றது. அதைப் பார்க்காத இளவரசன் சூழலூதும் கவனத்தில் கண்களை மூடிக் கொண்டு உட் கார்ந்திருந்தான். கண்களை மூடிக் கொண்டே குழல் ஊதுவது- திடீ ரெனத் திறந்து பார்த்தால் எதிரே மயில்கள் ஆடும்- அதைப்பார்த்து மகிழ்வது !-இப்படி ஒரு இன்பக் கன வோடு அவன் இசை முழக்கம் செய்து கொண்டிருந் தான். ம அவன் என்ன கண்டான்; எதிரே உயிர்வாங்கும் பாம்பு பல்லிலே விஷம் தேக்கியபடி ஆடிக் கொண்டிருக் கிறது என்பதை ! மயங்கி நிற்கிறது நாகம் : மயக்கம் தெளிந்தால் இளவரசன் அதற்கு இரையாவான் ! 0AM