பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 தாய்மை இசை நின்றால், உடனே பாம்பின் மயக்கமும் தெளிந்துவிடும்! என்ன நடக்கப் போகிறது என்பதை உப்பரிகையி லிருந்தபடியே இளையவள் பார்த்துக் கொண்டிருந்தாள். புதரின் மறைவில் இருந்தபடியே தீட்சண்யன் புன் னகை சிந்திக் கொண்டிருந்தான். அந்தக் கொடுமையைக் காண்பதற்கு கோப் பெருந்தேவியும் அங்கு வந்து சேர்ந்தாள். கீதம் அவ ளைக் கவர்ந்தது. எங்கிருந்து வருகிறது என கவனித் தாள். இன்பநாதம் எழுப்புவது தன் மகன் எனக் கண் டாள். மகிழ்ந்தாள். அடுத்த கணம் மகிழ்ச்சி மறைந் தது. சுந்தர புரியின் எதிர்கால மன்னன்- அவனெ திரே சாவின் நர்த்தனம்! வயிற்றிலே கிடந்த வைடூரியம்! அதை விஷத் தால் குளிப்பாட்டி வேகவைக்க எதிரே மரணத்தின் மயக்கம் நிறைந்த சதிராட்டம்! "அய்யய்யோ-என்ன செய்வேன்" என நிமிர்ந் தாள். இளையவள்-தீட்சண்யன் இருவரும் இருப்பதை உணர்ந்தாள். அதைப் பார்க்காதவள்போல் பாலகன் பின்னே வந்தாள். அவளுக்குப் புரிந்து விட்டது, சதி பற்றிய விளக்கம். குழலோசை நின்றால், தன் குமரனை பாம்பு தீண்டி விடும் என்பதையும் தெரிந்து கொண்டாள். அவளது தாய் உள்ளம் தணலிலிட்ட புழுவாயிற்று. எந்தத் தாய்க்குத்தான் சகிக்கும்! தான் பெற்ற தங்க விக்ரகத்தின் மேனியெங்கும் நீலம் பாய்ந்து,