பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 6 ஆட்டக் காவடி ஆ ஆட்டக் காவடி என்றால் பக்திக் காவடி அல்ல! பக்திக்காவடி எடுத்து பிரார்த்தனை செலுத்துகிறார்களே; அவர்களுக்கு முன்னே நடைபெறுகின்ற காவடி ஆட்டக் கச்சேரி - அவ்வளவுதான்! ஆட்டக் காவடி எடுத்து ஆடுகிறவர்கள் பல பேர் ஏழெட்டு குடுக்கை மதுவை உள்ளே செலுத்தியபடி ஆடிக்கொண்டே யிருப்பார்கள். பக்திக் காவடி எடுப்பவர்கள் மட்டும் ஒழுங்கோ என்று கேட்கிறாயா? அவர்கள்தான் மதுவைவிட பயங்கர மான பக்திப் போதையில் இருக்கிறார்களே; அதனால் நான் சொல்வதைக் கேள் கனிமொழி! நான் நடத்தப் போகும் ஆட்டக் காவடி கச்சேரி, பக்தியின் பாற்பட்ட தல்ல என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்! கழுத் திலே காவடியிருக்கும் அவ்வளவுதான் - கருத்திலேயும் 2 -