பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தாய்மை ஆண்டவனின் சேவடியிருக்கும் என்று நினைத்துவிடாதே! அந்த மூடநம்பிக்கை போதை -என் எதிரே அலகு குத் திக்கொண்டு பால் சொம்பு கட்டிய காவடியை சுமந்து வருவார்களே; அந்தப் பக்தர்களிடத்திலேதான் இருக் கும். என் காவடியில் 'பாவலா' இருக்குமே தவிர பால் இருக்காது! ஆட்டக்கலை இருக்கும் - அறிவுக் கொலை இருக்காது! மயில் தோகை, காவடியின முன்னே இருக் கும்-மங்கை உன் நினைவுதான் மனதில் இருக்குமே தவிர மயிலேறும் முருகனைப் பற்றிய மடமைக் கனவு ய இருக்காது! - உத்திரவு கொடு என் தங்கமே! நூறு ரூபாய் தருவதாகச் சொல்லுகிறார்கள் - நாளெல்லாம் பாடுபட்டாலும் நாலைந்து மாதம் சேர்ந்தாற்போல் உழைத்தாலும் முழுசாகக் காண முடியாத பணம்! நூறு ரூபாய்! பழனிக்குப் போய் அங்கே ஆடினால், புதிய கிராக்கிகள் கிடைத்தாலும் கிடைக்கலாம், உத்தேச மாக இரண்டு மூன்று கிராக்கி கிடைத்தால் போதும் - முன்னூறு ரூபாயாவது மிச்சப்படுத்திக்கொண்டு வரு வேன். அனுமதி கொடு கனிமொழி! நாளைக் காலை யிலே புறப்பட வேண்டும் - பிரார்த்தனைக்காரர்கள் பெரிய பணக்காரர்கள். அவர்களிடத்திலே வாக்களித்து விட்டு வந்துவிட்டேன், நிச்சயம் வருவதாக! தடை சொல்லாதே தங்கம் - அவர்களை ஏமாற்றிவிட்டால், அவர்களுக்கு வேறு ஆட்டக் காவடிக்காரன் கிடைக்க மாட்டான். சாகிறவரையில் என்னைச் சபித்துக் கொண் டேயிருப்பார்கள்!-சரி என்று சொல்லு!- எங்கே?... என்னைப் பார்! சரியென்று சொல்லமாட்டாய்?..." - ― 99 கனிமொழியின் முகத்தை ஆவலோடு நோக்கிய வாறு கெஞ்சுத் தோரணையில் கந்தன் பேசிக்கொண்டே