பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24 தாய்மை "அவர்கள் தனியாக ஆடட்டும் பக்திக் காவடி! நீங் கள் வேறொரு நாளைக்கு ஆட்டக் காவடி ஆடுங்கள்! உங்கள் கலைத்திறமையைக் காட்டுங்கள்-யார் வேண்டாமென்றது? இரண்டும் ஒரே நேரத்தில் வேண் டாம் - இழிவும் பழியும் வந்து சேரும்! உங்கள் ஆட்டக் காவடித் திறுமையைக்காட்ட நானே ஏற்பாடு செய்கி றேன் ஒரு நாள்-ஊர் மக்களைக் கூட்டுவோம்-அவர் கள் எதிரே உங்கள் கலைத்திறமையைப் பொழியுங்கள் -அதைக் கண்டு களிக்கிறேன் நான்- அதைவிட்டு காசுக்காக, மாசு ஏற்படுத்திக் கொள்ளவேண்டாம்." "பைத்தியக்காரி! நூறு ரூபாய் சாமான்யமா?" "எதற்கு நூறு ரூபாய் இப்போது? - நானென்ன உங்களை ஜரிகைப்புடவையும், தங்க நகையும் கேட்டுத் துன்புறுத்திக் கொண்டா இருக்கிறேன்-குடிக்கக் கஞ்சி போதும் - குடியிருக்க உங்கள் நெஞ்சு உங்கள் நெஞ்சு போதும் எனக்கு!” "கனிமொழி!... நீ என்ன சொன்னாலும் சரி, நாளைக்கு நான் பழனிக்குப் போய்த்தான் தீருவேன்-- முடிவை மாற்றவே முடியாது! என்று வேகமாக எழுந்தான் கந்தன். அவன் கை யைப் பிடித்து கனிமொழி நிறுத்தியபடி, "நன்றாக "நன்றாக யோசித்துப் பாருங்கள். ஊர் கேலி செய்யும் - உங்களையே வட்டமிட்டுக் கொண்டிருக்கும் உயிர்த் தோழர்கள் எல்லாம் ஊரார் முகத்தில் விழிக்க முடியாதபடி அவமானத்தால் தலையைக் குனிந்து நடக்க