பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக் காவடி 50 25 நேரிடும் - நண்பர்களை உத்தேசித்தாவது இந்த முடிவை மாற்றிக் கொள்ளுங்கள்!" "சரி! ஒரே முறை! அனுமதி கொடுத்துவிடு! - னிமேல் போகவில்லை!" "ஒரே முறை விஷம் சாப்பிட அனுமதி கொடுக்க முடியுமா?_' وو "கனிமொழி குற்றம் செய்கிறோம் என்பது தெரி கிறது - தெரிந்தாலும் சில நேரங்களில் செய்துதான் தீரவேண்டி யிருக்கிறது!" - "முன்னொரு காலத்தில் ஆட்டக்காவடி நிபுணரா யிருந்தீர்களே; அதையே தொடர்ந்து நடத்திக் கொண் டிருந்தால் - பழனிக்கு மட்டுமல்ல; திருச்செந்தூர், திருத் தணி- எட்டுக்குடி கதிர்காமம் வரையிலேகூட செல்ல லாம் இடையிலே பகுத்தறிவு புரியிலே விட்டோம் அத்தான் - அதைச் சற்று எண்ணிப் பாருங் கள்! தெரிந்த குற்றத்தைப் பிறகு செய்ய மாட்டீர்கள். நுழைந்து கந்தன் அசைவற்று நின்று கொண்டே யிருந்தான். கனிமொழியின் கண்கள் அவனையே நோக்கியபடி யிருந் தன. அவளது எண்ணங்களொ கடந்த கால ஏடுகளைத் தொட்டுப் பார்த்துக் கொண்டிருந்தன. கனி மொழி, நெசவாளி வீட்டிலே உதயமான நீல நிலவு: அவள் தந்தை நெல்லையப்பர் பழுத்த பகுத் தறிவுவாதி, ஒரே மகளை செல்லமாக மட்டுமின்றி, சிந்தனைத் தோட்டமாகவும் வளர்த்து வந்தார். பட்டிக்