பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 தாய்மை காட்டு நடையுடை பாவனைகளோடு பகுத்தறிவுப் பெட்ட கமாகவும் விளங்கிடும் முதல் பெண்மணி கனிமொழி யாகத்தான் இருக்கவேண்டு மென்று நெல்லையப்பர் பெருமையோடு கூறிக் கொள்வார். கனிமொழி குழந்தை முதலே பகுத்தறிவுப் பாடசாலையின் மாணவி யாக மாறிவிட்டாள். தீபாவளி! தெருவெல்லாம ளைப்படும் வர்ண - ரக மத்தாப்புக்கள் - வானவில்லை - அவைகளை அப்பா யொத்த நிறங் காட்டும் வாண வகைகள் யெல்லாம் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டாள். வாங்கித் தந்த "தீபாவளி கொண்டாடாதே!" என்ற புத்தகத்தை வாசலில் உட்கார்ந்து கொண்டு உரக்கப் படிப்பாள். தெருப் பிள்ளைகள் கொளுத்தும், சீன வெடிகளோடு போட்டி போடும் இந்த சிங்கார சிட்டெ. ழுப்பும் சிந்தனை முழக்கம்! சு . சோமவார விரதம் - மாரி காளி பண்டிகை-திரௌ பதியம்மன் தீமிதி உற்சவம்- இப்படியெல்லாம் மனதைக் கவரும் திருவிழாக்கள் வரும் -போகும் -கனிமொழியோ, அந்தக் குக்கிராமத்தில் இருந்தபடியே- குவலயத்துப் புதுமைகளைப் பற்றி எண்ணிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருப்பாள். கனிமொழி - கனி மரமானாள். அந் தக் கன்னியைத் தனியே விட்டுவிட்டு தந்தை கால மானார். தாயற்ற அவள் இப்போது அனாதைப் பட்டத் துக் குரியவளானாள். அவளது வாழ்க்கை எப்படியெப் படித் திரும்பப் போகிறதோ என்பது பற்றி ஊரார் ஆரு டம் கணித்துக் கொண்டிருந்தனர். அந்தச் சமயத்தில் தான் அவள் வீட்டு வாசலிலே பம்பை, மேள வாத்திய ஒலி கேட்டது.