பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தாய்மை அத்துணை பக்திப் பூர்வமாக நின்று கொண்டிருந்தார் பண்ணை! "ஊரதிர ஆடுகிறானே; காவடி ஆட்டம்- அவன் தான் கந்தன்" என்று அடுத்த வீட்டுக்காரி கனிமொழி யிடம் கூறினாள். குழப்பம் உந்தித் தள்ள கனிமொழி வீட்டுக்குள்ளே போய்விட்டாள். மிருகண்டு முதலியாரும் காவடியுடன் நகர்ந்தார், கனிமொழியின் வீட்டுக் கதவைப் பார்த்தபடி! எங் பம்பை ஒலிகள் சிறிது சிறிதாகத் தேய்ந்து மறைந் தன. கனிமொழியின் இருதயத்திலே மட்டும் கேயோ ஒரு மூலையில் ஏதோ ஒரு ஒலி ஈனஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தது.

ஒரு நாள் இரவு கதவு தட்டும் சப்தம் கேட்டு, கனி மொழி திறந்தாள். மிராசுதார் மிருகண்டு முதலியார் மளமளவென்று வீட்டுக்குள்ளே நுழைந்தார். அவரே தாளிட்டார். கதவை காரணத்தை விளக்கவா வேண்டும்? கனி யிருக்கி றது - வௌவால் பறந்து வந்துவிட்டது! "யாரடா நீ-அன்று நெற்றியிலே அலகு குத்திக் கொண்டு பக்தி ததும்ப காவடி எடுத்த கண்யவானா நீ?" கனிமொழி நெருப்பானாள்! வருடு!" "ஆமாம் கிளியே! அந்த அலகு வெள்ளி அலகு! கிள்ளை நீ உன் அலகால் என் கன்னத்தை வரு என்று கை தொட்டார் மிராசுதார்.