பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆட்டக் காவடி 29 கனிமொழி - பகுத்தறிவுப் பெண்ணன்றோ! கண் விளையா ணகி சரிதம் படித்தவளன்றோ-அவள் கை டிற்று, பண்ணையாரின் கன்னங்களிலே; இருந்தாலும்! வெறிப்பிடித்த வேங்கை - நெறி பிறழா மான்குட்டி- ஆபத்து நெருங்கிவிட்டது -கூக்குரல்-கூச்சல்-அப யங்கேட்கும் அபாய அறிவிப்பு-அந்தக் குடிசையிலே யிருந்து கிளம்பிற்று. அப்போது அங்கே வந்து குதித் தான் ஆட்டக் காவடி கந்தன். மிருகண்டு மிரண்டார். கந்தனின் கால்களில் மிதியுண்டார். கனிமொழி தப்பி னாள். கதைகளிலே கதாநாயகிக்கு ஆபத்து வருவதும், கதாநாயகன் காப்பாற்ற வருவதும்-பின் காதல் உதய மாவதும் வழக்கமாகி விட்டதைப் போலவே, கனிமொழி யின் வாழ்க்கையிலும் அப்படி ஒரு உண்மைச் சம்பவம் எதிர்பாராமல் நடந்து விட்டது. கந்தனும், கனிமொழியும் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்குவதற்கு, அவள் விதித்த நிபந்தனைகள் ஏராளம். அவைகளிலே ஒன்றுதான், அவன் ஆலயங்களுக்கு ஆட்டக்காவடி ஆடுவதை நிறுத்த வேண்டு மென்பது! ஒத்துக் கொள்ளாமல் இருப்பானா?-ஆட்டக்காவடி நிறுத் தப்பட்டது- அவனுக்கு அவள் அறிவு ஆசானாக ஆனாள். கந்தனும் கனிமொழியானான். அதன் பிறகே இருவருக் கும் திருமணம். ஊரே ஆச்சரியத்தில் மூழ்கியது. கந் தனின் வழியிலே பல காளையர் நடைபோடத் தொடங் கினர். கந்தன் அந்த ஊர் வாலிபர்களுக்கு இளந்தலை வனானான். கனிமொழியோ ஆனந்தக் கடலில் ஒளி விட்டுப் புறப்படும் பூரணமதியம்போல் முகங்காட்டிப் பூரித்தாள். காவடிக் கந்தன் கைத்தறிக் கந்தனானான்.