பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 தாய்மை கைத்தறியிலே வந்த பணம் அவன் தாராள செலவுக் குப் போதவில்லை தான்! கஷ்டப்பட்டான். ஆனாலும் கனி மொழியின் மனத்திற்கு விரோதமாக நடப்பதற்கு பயப் பட்டான். மிராசுதார் மிருகண்டுவின் மகன்-பீதாம்பரத் தின் மூளை வேலை செய்தது. செய்தது. ஊரிலே எழுந்துள்ள கொள்கைக் கோட்டையைத் தவிடு பொடியாக்கக் கருதி னான். கந்தனின் நண்பனானான். அருமை பெருமைகளைப் பற்றி அடிக்கடி உபதேசித்தான் கந்த னுக்கு! கந்தனின் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு, அவைகளுக்குத் திருத்தங்கள் சில தருவதுபோல நடித் தான். அப்படி அவன் தந்த திருத்தங்களிலே ஒன்று தான் பழனிக்கு ஆட்டக் காவடி எடுக்கலாம் என்பது!

காசின்

கந்தன், அந்தத் திருத்தத்திற்கு விளக்கம் கொடுக்க, கனிமொழி கற்சிலையாக நின்று கொண்டிருந்தாள் அன் றிரவு. நின்று கொண்டிருந்த கந்தன், திடீரென அதை விட்டு வேகமாக அகன்றான். மறுநாள் அவனது பழனிப்பயணம் ஆரம்பமாயிற்று, ஆட்டக் காவடி ஆட்டமும் பழனித் தெருக்களிலே பிர மாதமாக நடைபெற்றது. அவன் எதிர்பார்த்தபடியே அங்கேயே அவனுக்கு மூன்று நான்கு கிராக்கிகள் மோதின. முன்னூறு ரூபாய் கிடைத்தது. எடுத்துக் கொண்டு ஊருக்குத் திரும்பினான். பணத்தைக் காட்டி, கனிமொழியின் கோபத்தைப் போக்கி விடலாம் என்ற பூரண நம்பிக்கையோடு வீட்டுக்குள் நுழைந்தான்.