பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி பொழுது போக்கினர். (3 ஊரே மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக் 'தீபர்வளி தமி கும் அந்த இரவில், நாராயணி மட்டும் சோகத்தின் நிழ லாக தன் வீட்டில் அமர்ந்திருந்தாள். ழரின் திருநாளல்ல; தமிழரின் இறந்த நாளைக் கொண்டா டும் ஆரியப் பண்டிகை. கருத்துக்கு ஒவ்வாத கதை அளப்பு. அதை நமது பண்டிகையாகக் கொண்டாடிக் குதூகலிப்பது குருட்டுக் கொள்கை. ஆகவே, அதில் கலந்து கொள்ளக் கூடாது' என்பதல்ல நாராயணியின் எண்ணம்! அவள் அவ்வளவு அறிவு வளர்ச்சி பெற்றவளு மல்ல. போட்டி போட்டுக் கொண்டு புராணக் குட்டை யிலே மூழ்கி எழும் பெண்மணிகளின் வரிசையிலே அவ ளும் ஒருத்தி தான். ஆயினும் அவள் தீபாவளி கொண் டாடவில்லை. காதைத் தொடமுயலும் கண்களும், காண்பவரைக் கவரும் விதத்திலே அமைந்த உடற்கட்டும் பெற்ற நாரா யணி தன் வீட்டு முகப்பிலே அமர்ந்து, தீபாவளி விழா வில் கலந்து மகிழும் ஊராரைப் பார்த்துப் பெரு மூச்சு விட்டுக் கொண்டிருந்தாள். வீதியிலே கிருஷ்ணன் - சத்ய பாமா விக்ரகம் அலங் கரிக்கப் பட்ட அழகான ரதம் பவனி வந்து கொண்டிருந் த்து. 'வீரன்' கிருஷ்ணன் நரகா சூரனிடம் தோற்று மயங்கும் வேளையிலே, தனது கணைகள் கொண்டு அசு ரணை அழித்தாள் பாமா என்பது தானே புராணம். சங்கு சக்ராயுதபாணியான விஷ்ணுவின் அம்சம் பரமாத் மாவே வீழ்ந்துவிட்டபோது - அவரின் தேவி, அசுரசிங் கத்தின் உயிரை அணைத்து விட்டாள் என்றால் ஆச்சரிய மாகத் தானிருக்கும். எக்கணை வீசினாளோ; என்ன