பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி 35 யோடு நிற்கிறான் அவன். அவனெதிரே கிருஷ்ணன் - மயங்கிய நிலையில்! பாமா வேல்பாய்ச்சும் சாயலில்! - இதுவே ரதத்தில் சித்தரிக்கப் பட்டிருந்த தீபாவளிக் காட்சி. அறிவுக்கு அணைகட்டி, இன உணர்ச்சியைத் தடுக்க பெரும் சுவரும் எழுப்பி வைக்கும் அந்தப் பண்டி கையில் தம்மை மறந்து பங்கெடுத்துக் கொண்டு, பர வசமுற்றனர் அந்த ஊரார். நாராயணியின கண்களை விட்டு ரதம் மறைந்தது. வாணச் சத்தம் அவள் காதைத்துளைத்துக் கொண்டு தானிருந்தது. ரதத்திலே அவள் கண்ட நரகாசூர வதக்காட்சி, அவள் நெஞ்சை விட்டகலவில்லை. நினைவுகள் அலை மோதின. நடுத்தெருவிலே தான் நாராயணியின் வீடு. நடுத் தெருவிலே வீடுகட்ட நகரசபையார் எப்படி அனுமதித் தார்கள்; நகர சபையாருக்கு நாராயணியின் மீது அவ் வளவு அனுதாபம் விழக் காரணம் என்ன என்றெல் லாம் யாரும் சந்தேகப் படத் தேவையில்லை. அவள் வீடு இருந்த தெருவுக்குப் பெயரே நடுத்தெருதான்! . - நாராயணி நடுத் தெருவிலே, நடுத்தரமான குடும் பத்திலே நாலுபேர் அண்ணன் தம்பிகளுக் கிடையே பிறந்தவள். ஐந்து மக்களையும் விட்டு விட்டுப் பெற் றோர் விடைபெற்றுக் கொண்டனர். மாயூரம் காவேரி யாற்றிலே துலா முழுக்கு ஆடுவதற்காகச் சென்ற சகோ தரர்கள் நால்வரும், திரும்பி வராமலே போய்விட்டனர். இளைய தம்பி, ஆற்றுச் சுழலிலே சிக்கிக் கொள்ள, அவனை விடுவிக்க ஒருவர் பின் ஒருவராக மூவரும் குதித்து, அனை வரும் நேரே "மோட்சலோகம்" போய்விட்டனர், என்ற செய்தி மட்டுமே நாராயணிக்குக் கிடைத்தது.