பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36 தாய்மை இந்த சோகச்சுமை அவள் தலையிலே விழும்போது, அவள் பருவக்கொடி! சிற்பியின் கைத்திறனே உயிர் பெற்றது போன்ற சிந்தை கவர் உருவம்! புருவம் - பருவம் - எல்லாமே, ஆண்களின் கர்வமடக்கும் விதத் திலே அமைந்திருந்தன. அழகுச்சிலை! அற்புதப் பதுமை! தேன் மலர் ! திராட்சைக்கொடி! ஆனால் அந்த வாச ரோஜா வேலியின்றி - பாதுகாக்க யாருமின்றி - தன்னம் தனியே வாடிக் கொண்டிருந்தது. தந்தை, தாய் அண் ணன் தம்பி - எல்லோரையும் விழுங்கிவிட்டு இந்தப் பாவிக்கு மட்டும் பாழும் உயிரை ஏன் வைத்திருக்கிறாய்? என்று அவள் பகவான் சன்னிதானத்திலே பலமுறை அழுதிருக்கிறாள். க அப்படி அழுவதற்காக அவள் ஆலயத்திற்குச் செல் லும் போதுதான் குருக்கள் கிருஷ்ணய்யரின் சந்திப்பு ஏற்பட்டது. கோயில் குருக்கள் என்ற போதிலும் மிடுக் கான நடையுடை பாவனைகள் உடையவர். கழுத்திலே அழகான தங்கச் சங்கிலி, அந்தச் சங்கிலியின் முனையிலே ருத்ராட்சக் காய், இடுப்பிலே மயில் கண் வேட்டி, மேலே ஒரு வெண் பட்டுத்துண்டு, பி. ஏ. குடுமியுடன் கூடிய அமெரிக்கன் கிராப்பு - இவைதான் கோயில் குருக்கள் கிருஷ்ணய்யரின் அடையாளங்கள்! மறந்துவிட்டேனே; மன்னிக்கவும் - அன்றாடம் சலவை செய்யப்படும் பூனூல் உண்டு மார்பிலே! விபூதிப் பூச்சு உண்டு; விஷ்ணு வுக்கு விசேஷமான நாட்களிலே நாமமும் போடுவார்; பட்டையாக அல்ல; பக்குவமாக - சிறிய கோடாக - சிங் காரம் கெடாமல்!