பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி 37 வயதோ முப்பதுக்குமேல் இல்லை. இந்த ஒரு முதல் போதாதா; காதல் வியாபாரத்தை ஆரம்பிக்க. ஐம்பது அறுபது ஆனதுகளே, நரை மயிர் கருக்கும் தைலம் தடவிக் கொண்டு - பொய்ப்பல்லால் புன்னகை புரிந்து - நஷ்டம் வந்தாலும் பரவாயில்லையென்று காதல் வாணிபம் நடாத்த கன்னியரைத் தேடியலையும் போது முப்பதே வயதான கிருஷ்ணய்யர் மட்டும் சும்மா இருப் பாரா? அதுவும் புறா வலுவிலே பறந்து வருகிறது- வட்டமிட்டுப் போகிறது என்றால், கேட்கவும் வேண்டுமா? நாள் தோறும் நாராயணி ஆண்டவன் சன்னதியிலே கண்ணீர்த் துளிகளை சிந்தினாள். கிருஷ்ணய்யர், விபூதிப் பிரசாதம் அளித்து வந்தார். இந்த விஷயம் பல நாட்கள் மௌனமாகத்தான் நடந்து வந்தது. மாலை எப்போது வரும்; அப்போது அந்த மயிலும் வருமே - என்று பாதை மீது பார்வையை விரிக்க ஆரம்பித்தார் கிருஷ்ணய்யர். நாராபணி கடவுளின் முன்னே தினம் தினம் அழவேண் ? காரணம் என்ன டிய காரணம் குருக்களின் இதயத்தைக் குடைந்தது இந்தக் கேள்வி. அவளையே கேட்டுவிடத் தீர்மானித்தார். ஆனால் அவள் வரும் நேரத்திலேதான் அந்தப் பாழும் பக்தகோடிகளும் ஆலயத்திற்கு வருவது வழக்கமாக இருந்தது. தனிமையில் அவளிடம் பேச அவருக்கு வாய்ப்பில்லாமலே போய்விட்டது. ஒரு நாள் - சோமவாரம் - கோயிலிலே அபிஷேக ஆராதனைகள் அமர்க்களப்பட்டன. நல்லகூட்டம். கச் சேரிகள் வேறு. அந்த ஊர்ப் பெரிய மனிதர் ஒருவர் 3