பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 தாய்மை காங்கிரசிலே சேர்ந்துவிட்டதற்காக நடத்தப்பட்ட திரு விழா அது. கோயிலுக்கு எதிரேயுள்ள காளி மண்டபத் தில் ஆடு வெட்டி பலி கொடுத்து, கள்ளுக் குடங்களும் வைத்துப் படைத்து, காந்தியாரின் கொள்கைக்குப் பெருமை கொடுத்தார்கள். அதையொட்டி பெரிய கோயி லிலும் உயர்ந்த முறையிலே உபயம் நடத்தினார்கள். அன்றைய தினம் வழக்கம்போல் நாராயணிவந்தாள். காத்திருந்த அய்யரும் பூத்திருந்த மல்லிகை வந்துவிட்ட தென மகிழ்ந்தார். பாரதம் நடக்குமிடத்திலும் - பாட்டுக் கச்சேரி நடக்குமிடத்திலும் பக்தர்கள் தங்கள் கவனத் தைத் திருப்பியிருந்தார்கள். நாராயணியோ கர்பக் கிர கத்திற்குள்ளே நுழைந்தாள். தாமரை மொட்டுபோல் கரங்குவித்தாள். காமனை வெல்லும் விளி மூடினாள். இமை அணையைப் பிளந்து கொண்டு கண்ணீர் வெள்ளம் புறப்பட்டுக் கன்னத்தின் மேட்டிலே கிளைகளாகப் பிரிந் தது. ஆழ்ந்த பக்தியிலே மெய் மறந்து நின்றாள். "எனக்கு வழி காட்டு அப்பனே ! என்னை மட்டும் உலகத்திலே ஜீவித்திருக்க ஏன் விட்டாய்? பெரிய குடும்பத்திலே தனி மரமாய் நின்று தவிக்கிறேன்; இது உனக்கு நியா யந்தானா என்று கதறினாள். . பிரார்த்தனை முடிந்தது. பிரசாதம் தர அய்யர் வந் விபூதியை வாங்கி நெற்றியிலே இட்டுக் கொண் டாள். திரும்பினாள். தார். . காய்ந்துபோன தொண்டையைக் கனைத்துக் கொண்டு, அய்யர் ஏதோ பேச வாயெடுத்தார். நாக்கு எழவில்லை. கஷ்டப்பட்டுப் பேசியே விட்டார். நடுக்கத்