பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி 39 தோடு! "ஏனம்மா, தினந்தோறும் இப்படிக் கண்ணிலே ஜலம் விடுறே?" இதைக் கேட்டதும் நாராயணிக்குத் தூக்கி வாரிப் போட்டது. தானோ, ஒரு பருவ மங்கை. வீட்டைவிட்டு வெளியே கிளம்புவதே தப்பு; கோயிலுக்கு வருவதால் யாறும் குறை சொல்லமாட்டார்கள். ஆனால், அங்கே ஒரு ஆடவரோடு பேசுவது என்பது ஒத்துக்கொள்ளக் கூடிய விஷயமா? இவ்வளவையும் அவள் நினைத்துப் பார்த்து, பதில் சொல்வதா இல்லையா என்ற தீர்மானத் துக்கு வரநேரமில்லை. அவளும் நடுங்கியவாரே, "எல் லாம் என் விதி!" என்று பதில் கூறினாள். "நாராயணி! நோக்கு என்ன கஷ்டம்னு நேக்கு நன்னாத் தெரியும் பெத்தவாள், பிறந்தவாள் எல்லாம் போயிட்டா! ஒண்டிக் கட்டையா இருந்து தவிச்சிண் டிருக்கே!" என்று பீடிகைபோட ஆரம்பித்தார் குருக்கள். நாராயணிக்கு அழுகை அதிகமாயிற்று. "நான் வரு கிறேன் என்று கூறிவிட்டு, கர்பக் கிருகத்தைவிட்டு வெளியேறினாள் அவள். ஆண்டவன் தரிசனம் முடிந்ததும், கோயில் பிரகாரத் தைச் சுற்றிவிட்டுப் போவது நாராயணியின் பழக்கம். அவ்வாறே, அன்றும் அவள் பிரகாரத்தைச் சுற்றி வந்து கொண்டிருந்தாள். பிரகாரத்திலே, அப்பிரதக்ஷண மாகச் சுற்றி வந்து கொண்டிருந்த கிருஷ்ணய்யரை அவள் எதிரே கண்டாள். நாணத்தால் தலையைக் குனிந்தவாறு அவரைக் கடந்து செல்ல முயன்றாள். கிருஷ்ணய்யர் சுற்று முற்றும் பார்த்தார். பிரகாரத்தின் .