பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40 தாய்மை பக்கம் யாருமே வரவில்லை. எல்லோருமே கச்சேரி மண்ட பங்களில் நிறைந்திருந்தனர். "நாராயணி, நில்!" என் றார் மெதுவாக! நாராயணிக்குக் கால் பெயரவில்லை. நின்று தீரவேண்டியிருந்தது. கிருஷ்ணய்யர் அவள் எதிரே ஓடினார். அவள் கால்களிலே தலை முட்டுமள வுக்கு சாஷ்டாங்கமாக தொண்டனிட்டு வீழ்ந்தார். நாராயணிக்கு ஒன்றுமே புரியவில்லை. 'சுவாமி! என்று கத்திவிட்டாள். சுவாமி!! "நாராயணி! அடியேனை என்று ரட்சிப்பாய்! தேவி விக்ரகத்தின் முன்னேகூட அடியேன் இப்படி நமஸ்கரித்தது கிடையாது. நீதான் எனக்குத் தேவி ! என்னை ஏற்றுக்கொள் !” என்று மன்றாடி நின்றார். று "சுவாமி! தாங்கள் தேவ குலம் நானோ. என்று இழுத்தாள் அவள். 66 . "முற்றும் துறந்த பெரியவாளுக்கு எல்லா குலமும் ஒரே குலந்தான! நான் ஆண் குலம் - நீ பெண் குலம். வா, இருவரும் காதல் குளத்திலே நீந்துவோம்,” என்று கையைப் பிடித்தார் அய்யர். "அய்யோ சாமி! ஆண்டவன் கோயில்..." என்று எச்சரித்தாள் நாராயணி. "அருகில் ஒன்றும், தலையில் ஒன்றும் வைத்திருப் பவர்தானே ஆண்டவன் - இது தெரியாதோ நோக்கு!" என்று அவள் ஜடையைப் பிடித்து விளையாடினார் குருக் கள்.