பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 தாய்மை டார் அய்யர். என்ன இருந்தாலும் அனுபவிக்கப் பிறந்த ஜாதியப்பா அது! எத்தனையோ பேர் நத்திக் கிடந்தார் கள்; எல்லோரையும் எட்டி உதைத்துவிட்டு, பூணூல் வலையிலே மாட்டிக் கொண்டது அந்தப் புள்ளிமான்! போகிறான் போ! அவனாவது சுவைக்கட்டும்!”-இளங் காளைகளிடத்திலே, இப்படிப் பொறாமை வடிவத்திலே ஆரம்பமான பேச்சு, விட்டுக் கொடுக்கும் தன்மையிலே முடிவு பெற்றது. நம்பிய கடவுளின் பக்கத்திலேயிருந்து கடமைகளைச் செய் கிற மனிதர் மிகவும் நல்லவராக இருப்பார்; வரைக் கைவிட மாட்டார்; அதிலும் பிராமணர்-புரண்டு பேசமாட்டார்; பொய் கூறுவது பாபமெனக் கருதுவார்; பரமசிவன் பக்கத்திலே பார்வதிபோலத் தன்னையும் அருகே யைத்து ரட்சிப்பார் என்ற நம்பிக்கையிலேதான், நாராயணி, கோயில் குருக்களைத் தன் கணவனாக ஏற்றுக் கொள்ள முடிவு செய்தாள். கோயில் பிரகாரத்திலே - கர்ப்பக்கிரகத்தின் நிழல் பட்டு இருண்டிருந்த இடத் திலே - இதழ்களைப் பரிமாறிக் கொண்டு - திரும்பி இல் லம் வந்த பிறகு, அன்றிரவு முழுதும் தூங்காமல் அவள் யோசித்ததின் முடிவு குருக்களைத் தன் மணாளனாக ஆக் கிக் கொள்வது என்பதுதான். 66 'ஏண்டி நாரா, கவலைப்படுறே! நான் பிரமணன்- நீ சூத்திரச்சின்னுதானே பாக்கிறே! பிராமணாளுக்குத் தலைவர் இருக்காரே ; எங்க ராஜாஜி- அவர் மகளை காந்தி மகனுக்குக் கொடுக்கலியோ -ஜாதி ஆசாரம் பேசி னாளே; என்ன ஆச்சு அது? அம்பேத்கார்னு ஒரு பறை யன் - ஆதித் திராவிடர்னு சொல்லிக்குவா - அவரைக்