பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி 43 கல்யாணம் பண்ணிண்டு இருக்கிறது யார் தெரியுமோ? எங்க ஜாதிக்காரி ஒருத்திதான்! ஜாதி ஆச்சாரம் எங் கேடி போச்சு ? ? ருக்மணி அருண்டேல் சமாச்சாரம் தெரியுமோ நோக்கு! அடி அசடு - பித்துக்கோரி ! சொல்றதைக் கேளுடி ! பயப்படாதே! நான் உன்னைக் கல்யாணம் பண்ணிக்கப்போறேன்-என்று கிருஷ்ணய் யர் பிரசங்கம் ஒன்றே செய்தார். "ஜாதியாரெல்லாம் கல்யாணத்துக்கு களா?” என்று கேட்டு வைத்தாள் நாராயணி. வருவார் வரவேண்டாமே - நான் ஜாதியாருக்கு சொல்லப் போறதே இல்லை. நீ என்னோட சாயரக்ஷை கோயி லுக்கு வரவேண்டியது; இதோ வாங்கி வச்சிருக்கேன் மாங்கல்யம்! ஆண்டவனுக்கு நேரா இதை உன் கழுத் திலே கட்டுவேன். நமக்கு மனுஷாள் சாக்ஷி வேண் டாம்! தேவாள் சாக்ஷி போதும் - ஆண்டவாள் சாக்ஷி போதும்! என்ன சொல்றே? என்று குழைவோடு கேட்டார் குருக்கள். மகேசன் சன்னிதானத்திலேயே தனக்குத் தாலி கட்டப் போகிறார் குருக்கள் என்ற செய்தி கேட்டு, நாரா யணி குதூகல மடைந்தாள். அவள் கழுத்திலே தாலி மின்னியது. ஊரிலே பேசிக்கொண்டார்கள் கிருஷ்ணய் யர் நாராயணியை வைப்பாக வைத்திருக்கிறார் என்று! அப்படியே பேசியவர்களிடம் அவரும் 'ஆமாம்' போட் இப்படி ஊரார் பேசுவது நாராயணி காதிலேயும் விழுந்தது. அவள் அவரிடம் முறையிட்டாள். 'என்னை உங்கள் 'வைப்பு' என்று சொல்கிறார்கள்' என்று! .