பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி 45 கோயில் வேலையையும் தியாகம் செய்து விடடீர்களே !" என்று கதறினாள். "நாராயணி! சிறு பிள்ளை மாதிரி அழுதுண்டு இருக்காதே! உனக்காக நான் எவ்வளவோ செய்திருக் கேன். அது மாதிரி நீ எனக்காக எதுவும் செய்யத் தயா ராயிருக்கணும் - அதுதான் எனக்குத் தேவை!" என்று சொல்லியபடி அவள் கூந்தலைக் கோதினார் அய்யர். வி "சுவாமி! தங்களுக்காக உடல் - பொருள் - ஆவி மூன்றையும் தத்தம் செய்யத் தயாராயிருக்கிறேன்" என்று அவரது மடியிலே சாய்ந்து விக்கி விக்கி அழுதாள் அந்த விழியழகி ! கிருஷ்ணய்யர்-நாராயணி' ஜோடியைப் பார்க்கும் போது; அய்யோ, இந்த யுவதிக்கு இந்த மனிதன் அவ் வளவு பொருத்தமில்லையே' என்று சொல்லத்தான் தோன்றும். 'கிளி மாதிரி இருக்கிறாள் - இவனோ எலி மாதிரி இருக்கிறான்'- என்று விமர்சித்தவர்களும் உண்டு. 'பேரழகின் பிறப்பிடம் அவள் - இந்தப் பிராமணனோ அவளெதிரே விண்மீனுக்குமுன் மின்மினியாகத் தெரி கிறான்' - இப்படிப் பேசாதாரும் இல்லை. ஆனால், நாரா யணியின் கண்களோ, இவைகளுக்கெல்லாம் விதி விலக்கு. அவள் மனக் கண்களுக்கு முன்னே எல்லோ ருடைய விமர்சனமும் தவிடு பொடியாகி விட்டது. குலப் பெருமை இழந்தார்-கோயில் குருக்கள் என்ற மதிப்பை இழந்தார் - இவ்வளவும் தனக்காக! தன்னி டம் தந்த வாக்கை நிறைவேற்றுவதற்காக! -என நினைக் கும்போது, நாராயணிக்கு நேரே கிருஷ்ணய்யரின் உரு