பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/48

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-46 தாய்மை வம் - கிருஷ்ண பகவானின் உருவம்போலவே தோற்ற மளித்தது. "கண்ணா, மணி வண்ணா!" என்று அவள் பாடாததுதான் பாக்கி. அவ்வளவு பக்தியும் பாசமும் புருஷன்மீது ஏற்பட்டுவிட்டது அவளுக்கு. குஷ்டரோகிக் கணவனைத் தாசியின் வீடடுக்குத் தூக்கிச் சென்ற நளாயினி - 'தேவலோகத்து மாதர்கள் கற்பரசிகளாய் இல்லாதபோது, பூலோகத்தில் மட்டும் கற்பரசிகள் இருக்கலாமா? அவர்களை சோதிப்போம்' எனத்தோள் தட்டிப் புறப்பட்டு, நிர்வாணமாக வந்து சோறு பரிமாறச் சொன்ன மும்மூர்த்திகளை குழந்தை களாக மாற்றி நிர்வாணக் கோலத்தோடு அன்னமிட்ட அனுசூயா -இத்தகைய பத்தினிகளை யெல்லாம் தோற் கடிக்கும் அளவுக்கு பதி சொல் தட்டாத பாவையாக நடந்து கொள்ள வேண்டுமென்று நாராயணி ஆசைப் பட்டாள். கோயில் வேலையிலிருந்து நீக்கப்பட்ட இரண்டு நாட் களுக்குப் பிறகு, ஒரு நாள் இரவு கிருஷ்ணய்யர் அவசர அவசரமாக வீட்டுக்கு ஓடி வந்தார். அவரது உடலெங் கும் வியர்வைத் துளிகள். மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங் கியபடி" நாராயணி! நாராயணி!" என்று அலறினார். று அவளோ “என்ன? என்ன? என் என்று கேட்டபடி, சின்ன இடை நெளிய ஓடி வந்தாள் பள்ளியறையி லிருந்து! அய்யர் பிரக்ஞையற்ற நிலையில் நின்று கோண்டு பிதற்றினார். “நாராயணி! செய்திருக்கேன் ?” நோக்காக நான் எவ்வளவு தியாகம்