பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 தாய்மை கிருஷ்ணய்யரைவிட அழகான ஒரு மனிதர். நல்ல தேகக் கட்டுப் படைத்த வாலிபர். முறுக்கிவிடப்பட்ட இள மீசைகள் அவரது முகத்தின் கம்பீரத்தை அதிகப் படுத்திக் காட்டிக் கொண்டிருந்தது. பரந்த மார்பகமும், அதை மூடியிருக்கும் பட்டுச் சொக்காயும், பார்ப்பவரைக் கவரத் தக்க விதத்திலே அமைந்திருந்தன. நெற்றியிலே லேசான நாமம் - சிகப்புக்கோடு மட்டும்! அவர் நாரா அவ யணியை உற்றுப் பார்த்தபடி அமர்ந்திருந்தார். ரைக் கண்ட நாராயணிக்குப் பேச வாயெழவில்லை. எழுந்தோடுவதற்கும் சக்தியற்றுப் போனாள். சொல்ல நினைத்தாள். வாய் குழறிற்று. ஏதோ “நீங்கள்.....? நீங்கள்.....?" - என்று மட்டுமே அவளால் கேட்க முடிந்தது. அப்படிக் கேட்டுக்கொண்டே யிருந்தாள். "நான்தான் தர்மகர்த்தா நரசிம்ம நாயுடு" என்று கூறியவாறு, நாயுடு அவளை இருகத் தழுவிக் கொண் டார். நாராயணி, அவரிடமிருந்து விலகிக்கொண்டு, "அய்யோ தெய்வமே! இது உனக்கு அடுக்குமா?" என்று கதறினாள். தெய்வம் அப்போது என்ன வேலை யாக எங்கே போயிருந்ததோ; தன் பிரதிநிதியாக 'காமனை' அனுப்பி யிருந்தது போலும்! அவனும் நரசிம்ம நாயுடு பக்கம் சேர்ந்துகொண்டு தூபம் போட ஆரம்பித் தான். "கண்ணே நாராயணி! என் பேச்சைக் கேளடி; பெண் தெய்வமே! என்று நாயுடு அவள் அழகின்