பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நடுத்தெரு நாராயணி 49 முன்னே மண்டியிட்டார். “என் கணவர்தான் இது போன்ற இழி தொழிலுக்கு இசைந்தார் என்றால், கோயில் தர்மகர்த்தாவாகிய தாங்களும் பாவச் செயல் புரியலாமா?" எனக் கண்ணீர் வடித்தபடி தர்மகர்த்தா வின் கால்களைக் கெட்டியாகப் பிடித்துக் கொண்டு துடித் தாள் நாராயணி. ― உப "பாபம், புண்ணியம் எல்லாம் எனக்குத் தெரியாது நாராயணி அதைப்பற்றியெல்லாம் உன்னிடம் தேசம் கேட்கத் தேவையில்லை. வாரம் ஒரு முறை எது தவறினாலும், கோயிலிலே வாரியாரின் உபதேசம் தவறு வதில்லை. அதை வரி பிசகாமல் என் காதால் கேட்டுக் கொண்டுதான் வருகிறேன்" என சிரித்தபடி அவளை வாரியணைத்தார் நாயுடு! அவரது வாலிபம் துள்ளும் வலிமை மிக்க கரங் களிலே நாராயணியின் மெல்லிய இடை சிக்குண்டு நெளிந்தது; வளைந்தது, துவண்டது ! அந்தப் பலமான அணைப்பிலே சிக்கியபடியே நாரா யணி அவரைப் பார்த்துப் பேசினாள். இருவருடைய முகங்களும் ஒன்றுக்கொன்று வெகு அருகாமையிலே தானிருந்தன. அவள் ஆத்திரத்தோடு கேட்டாள். “நீங் கள் செவி மடுக்கும் உபன்யாசங்களிலே இப்படித்தான் ன்னொருத்தன் மனைவியிடம் இன்பப் பிச்சை கேட்கச் சொல்லுகிறார்களோ?" என்று! "ஆமாம் கண்ணே - ஆமாம் ! சாம்பல் பூசிய சிவனை, தன் மனைவியோடு சரஸ சல்லாபத்திற்கு அனுப் பிய இயற்பகை நாயனார் புராண காலட்க்ஷேபம்-இன்று