பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/77

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அரும்பு 75 வித்தான் ஒரு குரும்புக்கார இளைஞன். கௌதம புத்தர் என்றாலே என்னவென்று தெரியாத பிஞ்சு குமார் ! அவன் படிக்கும் வகுப்பே வேறு! பள்ளி முடிந்து, பசலைகள் அனைவரும் கூட்டம் கூட் டமாக கும்மாளம் அடித்தபடி வீடு நோக்கி ஓடுகிறார் கள். குமார் மட்டும் தன்னந்தனியாக வந்து கொண்டி ருக்கிறான். வீட்டுக்குத் திரும்பும் குழந்தைகளை அவர் களது தாய்கள் வாயிலில் நின்று எதிர் கொண்டழைத்துத் தூக்கி முத்தமிடுகிறார்கள். குமார் அவைகளைக் கவனிக் கிறான். அந்த அரும்பின் நடையிலே ஒரு தளர்ச்சி ! கண்களிலே கலக்கம் ! இருதயத்திலே புயல்! தாங்குமா அந்த இளந்தங்கம் அந்தக் கொடு நெருப்பை! உருகி ஓடிற்று! "தனக்கு ஒரு அம்மா இருந்தால் தன்னையும் இப்படித்தூக்கி முத்தமிட்டு எதிர்கொண்டு அழைப்பார் களே !" இப்படித்தான் விம்மியது போலும், அந்தப் பிறை நிலவு! . எல்லாப் பிள்ளைகளும் அவரவர்கள் வீட்டுக்குப் போய்விட்டார்கள். குமார் மட்டும் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறான். அதோ, அவன் வீடு ! வீட்டு வாயி லிலே யார் அந்தப் புது உருவம்? ஒரு வேளை; அம் மாவா?...வாயிற்படியிலே அடியெடுத்து வைத்த அவனை வாரி யெடுத்துத் தூக்கினாள் கோமதி ! எதிர்பாராத ஒரு உணர்ச்சி குமாரின் உள்ளத்தை உலுக்கிவிட்டது போலும்? அவன் கண்கள் தாரை தாரையாக நீரைப் பொழிந்தன. கோமதிக்கு நடுக்கம் பிறந்தது. தன்னைக் குமார் ஏற்றுக் கொள்ளவில்லையெனக் கருதினாள். அவள்