பக்கம்:தாய்மை (மு. கருணாநிதி).pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 - தாய்மை وو மலைத் தோளும் அவளுக்குச் சொந்தம் ஒரு காலத்தில்! இன்றோ என் சொல்லுக்குச் சுழலும் "மாயப் பதுமை " யாகி விட்டார். மணிமுடி வீரர் ! இது எனக்கு வெற்றி தான் ஆனாலும் என் மனம் அமைதியடையவில்லை. அரசரின் பாசத்தையும் நேசத்தையும் இழந்தாள் எனி னும் பட்டத்து ராணி என்ற மதிப்பை இழந்தாள் இல்லை. அவளது மகன்தான் கிரீடத்துக்குச் சொந்தக்காரன் என்ற பாத்யதையைப் பறிகொடுத்தாள் இல்லை. 66 இந்த நிலையில் எனக்கு நிம்மதி ஏது மைத்துனரே! ஊரெல்லாம் அவள் பக்கம் அனுதாபம் காட்டுகிறது. அரசரும் அவளும் பிரிந்திருப்பது நாட்டுக்கு ஏற்பட்ட எதிர்பாராத கேடு என்று புலம்புகிறது மக்கள் மன்றம். என்னுடைய குணாதிசியங்களைக் கொற்றவன் சரியாகப் புரிந்துகொள்ளவில்லை; அதனால் என் வலையில் வீழ்ந்து விட்டார் - என்று மந்திரிகளின் குழு மாரடித்து அழுது கொண்டிருக்கிறது. இளைய ராணி நான்-என்கிற மதிப பைக்கூடத் தர மறுக்கிறது அரண்மனை வட்டாரம். "அரசரின் மஞ்சத்து ராணியாக மட்டுமின்றி, வெஞ்சமரில் வாளெடுத்து வேலெடுத்துப் போர் புரியும் வீராங்கனையுமன்றோ கோப்பெருந்தேவி அவள் எங்கே, வளையொலியால் மலைநிகர்த்தவரை வளைத்து விட்ட இவளெங்கே - என்று வீரர்களின் பாசறைகளில் பேசப்படுகிறது. இத்தனை எதிர்ப்புகளையும் சமாளிப்ப தற்கு நான் தயாராகிக் கொண்டிருக்கிறேன். ஆனாலும் மைத்துனரே! அவள் மகன் இன்பசாகரன் வளர்ந்து, இளவரசு மகுடத்தைத் தலையில் தூக்குவதற்குள் அழிக் கப்பட்டு விடவேண்டும். சுந்தரபுரி, சுழற்கண்ணியின்