பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/107

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கவியரச முடியரசன்

83



51. காப்புப் பருவம்

பன்னிருசீர் விருத்தம்

கலவைகள் விலகிடத் தனிமொழி உலவிடக்
கருதிய முதல்மகனாம்
கலைபல தெரிவுறு மறைமலை யடிகளைக்
கருதிவ ணங்கிடுவாம்
குலமொழி அடிமுதல் தெளிவுறும் படிவளர்
கூர்மதிப் பாவாணர்
குளிர்மிகும் மலரடி வழிதரும் எனமனங்
கொண்டுபணிந்திடுவாம்.

உலகினில் முதன்முதல் நிலவிய மொழியெனும்
உரைபெறுந் திருமகளாம்
உயர்தனி மொழியென அயலவர் புகன்றிட
ஒளிதரு செம்மகளாம்
அலைபல எதிரினும் நிலைபெறும் கலைமகள்/
அமுதெனும் மொழியினளாம்
அழகிய கழகமொ டுலவிய தமிழ்மகள்
அணிநலம் புரந்திடவே.

கற்பார் மனத்துணர்வை நற்பா படைத்துவளர்
கவிவாணர் அடிப்பூவையும்
கனலால் எரிந்துசிறை புகலால் மடிந்துமொழி
கருகாது வளர்த்தோரையும்
விற்போர் தொடுத்ததெனச் சொற்போர் நடத்திஉரம் த
விளைவாக உழைப்போரையும்
விதிரா மனத்துணர்விற் புதிதாய்த் தழைத்துவரும்
விழைவோடு தொழுதேத்துவாம்

மற்போர் புரிந்துநம திப்பார் புரந்தவரின்
மடிமீது வளர்ந்தமகளை
மருவார் பகைத்தருகில் வருவார் பதைத்துவிழ
மலைபோல நின்றமகளை
முப்பா லருந்திநலம் தப்பா திருந்தவளை
முதலாக வந்தமகளை
முதிரா நலத்திளமை அதிரா தெடுத்துவரும்
மொழியாளைப் புரந்தருளவே.

 

'தமிழன்னை பிள்ளைத் தமிழ்' என்ற தலைப்பில் 'தமிழகரசு' ஏட்டில் வெளிவந்த பாடல்கள்)