பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை

என் தந்தையார் கவியரசர் முடியரசனாரின் படைப்புகள் பல நூல்வடிவில் வெளிவராமல் இருந்த நிலையில், அவற்றை வெளியிட விரும்பிப் பல தொகுதிகளாகப் பிரித்துத் தொகுத்து அவற்றில் ஒன்றாகிய 'தாய்மொழி காப்போம்' எனும் இத் தொகுப்பிற்கான தலைப்பையும் 'போராட்ட உணர்வு வேண்டும்' எனும் முன்னுரையையும் கவிஞரிடம், 1990ஆம் ஆண்டே பெற்றும், பல சூழல்களாலும், எந்தை நெடுங்காலமாக உடல் நலிவுற்றிருந்ததாலும், நூல் தொகுப்பிற்கான அறிவுரைகளை அவர் வழங்க இயலாததாலும், இத் தொகுப்பை வெளியிட இயலாமல் இருந்தது.

இந்நிலையில் 1998ஆம் ஆண்டு தந்தை மறைந்துவிட்டார். பின்னர் 2001ஆம் ஆண்டு சென்னை தமிழ் மண் பதிப்பகம் மூலம் இந்நூலை முதல் பதிப்பாக வெளிக் கொணர்ந்தேன்.

இத்தொகுப்பில் உள்ள கவிதைகள் இந்தி எதிர்ப்புப் போராட்டக் காலங்களிலும், பிறமொழி ஆளுமையைக் கண்ட கொதிப்பிலும், தமிழ்நாட்டில் தமிழே ஆட்சி செலுத்த வேண்டும்