பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

viii

தாய்மொழி காப்போம்



என்ற துடிப்பிலும் கவிஞரின் நெஞ்சக் குமுறலில் வெடித்துச் சிதறியவை. இவைகளில் கவியரங்கத் தலைமையேற்றவை ஒரு சில; மற்றவை பல்வேறு இதழ்களில் வெளிவந்தவை.

தாய்மொழி காப்பதற்குத் தமிழ் உணர்வாளர்கள் அனைவரும் இந்நூலை வாளும் கேடயமுமாய்த் தம் கைகளில் ஏந்த வேண்டுகின்றேன்.

உலகின் முதன் மொழியும், தொன்மொழியுமாகிய நம் தென் மொழியைத் தமிழராகிய நாம் போற்றிப் பாதுகாக்கத் தவறி வருகின்றோம். செம்மொழியாம் நம் மொழியின் அருமை பெருமை களைப் பிறநாட்டார் அறிந்த அளவு கூட நம்மில் பலர் அறிய வில்லை. நாம் இப்படியே நம் தாய் மொழியைப் புறக்கணித்தோமானால் காலச்சுழற்சியில், தமிழ், தமிழன் என்ற அடையாளமே இல்லாத நிலை ஏற்படும். முன்னொரு காலத்தில் 'தமிழ்' என்று ஒரு மொழி இருந்தது எனவும், இம்மொழி பேசியவர்கள் 'தமிழர்' எனவும், எதிர்காலத்தில் வரலாற்றுப் பாடத்தில் கூடப் படிக்க இயலாது.

சாதிக்குச்சங்கம் வைத்துச் சண்மையிட்டு அழியும் தமிழர்கள், நம் மொழி, இனம் அழிந்தபின் அவர்கள் சாதியை எங்கே போய்த் தேடுவர்?

நாம் பிறமொழியை அழிக்க நினைக்கவில்லை. பிறமொழி எதையும் கற்கக் கூடாது என்றும் கூற வில்லை, பிறமொழி நம்மீது திணிக்கப்படு வதைத்தான் எதிர்க்கின்றோம். நம் மொழியைப் பிறர் மீது திணிக்கவில்லை; நம் மொழியைக் காக்கத்தான் துடிக்கின்றோம்.

தாய்மொழிப் புறக்கணிப்பு நம்மவர் செய்வது போல உலகின் எம்மொழியினரும் செய்வதில்லை. பிறமொழியினர், தம் தாய் மொழியைப் போற்றிப் பயிற்று மொழியாகவும், அறிவியல் மொழியாகவும் வளர்த்து முன்னேறுகின்றனர். உலகில் உள்ள பல நாடுகளிலே தாய்மொழியைத் தவிர்த்துப் பிறமொழியைப் பயன் படுத்துவதை அவமானமாகக் கருதுகின்றனர். ஆனால் அடிமை எண்ணம் கொண்ட தமிழ் நாட்டினர்தாம், அரைகுறை ஆங்கிலச் சொல் கலந்து பேசுவதைப் பெருமையாகக் கருதுகின்றனர். செருமனியில், செருமானிய மொழியை விடுத்து, ஆங்கிலத்தை அரசு அலுவலகங்களில் பயன்படுத்தினால், நீதிமன்றத்தில் நிறுத்தித் தண்டனை விதிக்கப்படுகிறது. சப்பானியர்கள் தங்கள் தாய் மொழியைப் போற்றியதன் விளைவாகவும், தாய்மொழியில் கல்வி கற்றதன் பயனாகவும்தான், உலகப் பெருவல்லரசான அமெரிக்காவையே அறிவியலிலும் தொழில் நுட்பத்திலும், பொருளாதாரத்-