பக்கம்:தாய்மொழி காப்போம்.pdf/70

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46

தாய்மொழி காப்போம்



31. தமிழனா நீ?

எடுப்பு


தமிழன் எனும்பெயர் தகுமா? - உனக்குச்
சான்றோர் மொழிசெவி புகுமோ? (தமிழன்)

தொடுப்பு


சமையம் பலபல சார்ந்தனை தாழ்ந்தனை
சாற்றிடும் சடங்கினில் வீழ்ந்தனை உனக்கினி (தமிழன்)

முடிப்பு


இந்துவென் றொருமதம் இனிதெனத் தோய்ந்தனை
ஏனோ தமிழ்மொழி உணர்வினில் தேய்ந்தனை?
வந்திடும் வடமொழிப் பேர்களுக் கேங்கினை
வையக அடிமையென் றொருபழி தாங்கினை (தமிழன்)

ஆங்கொரு சிலுவை அணிந்திட ஓடினை
அதனால் ஆங்கிலப் பெயர்களே நாடினை
ஈங்கொரு இகலாம் எனப்புகழ் பாடினை
ஏனோ அரபு மொழிப்பெயர் சூடினை? (தமிழன்)

ஒருமதம் தழுவுதல் உரிமையென் றோதலாம்
உன்தமிழ் அன்னையை எப்படி மீறலாம்?
பெரும்புகழ்த் தமிழகம் பெற்றிடும் நீயெலாம்
பிறமொழிப் பெயர்களை எப்படிச் சூடலாம்? (தமிழன்)

 

7.3.1987