பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 இதைக் கண்டார் தீனமூர்த்தி. இறங்கி வந்து சுவாதீனமாக அவளைபார்த்து முறுவல் இழைத்தவராக, கதவினத் திறந்தார். அவள் இறங்கிக் கொண்டாள். பையினின்றும் எலிஸ் பெத் டெய்லர்-ரிச்சர்ட்பார்ட்டன் ஜோடி கன்னம் பாய்ச்சி எட்டிப் பார்த்தனர்! 'போய் வரட்டுமா?” அவர் புறப்பட எத்தனம் புரிந்தார். அவள் நன்றி சொல்விப் பூங்கரம் கூப்பினள். பிறகு வாய்ப்பேச்சோடு, 'உள்ளே வந்திட்டு கொஞ்சம் காப்பி அல்லது ஹார்லிக்ஸ் சாப்பிட்டுப்பிட்டு', என்று கூறி, வார்த் தைகளின் தடுமாற்றத்தை பதட்டத்துடன் கட்டுப்படுத்தி விட்டு ஒதுங்கி நின்ருள். “வந்தது வந்தாச்சு. அப்படியே உங்க ஹஸ்பெண்டை யும் இன்ட்ரட்யூஸ் செஞ்சுகிட்டுப் பேகலாம்; ஆம்; அது தான் சரி! அதுவே முறை!” தீனமூர்த்தி அவளைத் தொடர்ந்தான். உள்ளே: சிறிய கூடத்தில், தரை மீது விரிக்கப்பட்டிருந்த மெத் தையில் சுந்தரியின் புருஷன் படுத்துக் கிடந்தான். எலும்புந் தோலுமாகக் காணப்பட்டான். கண்கள்; மூடியிருந்தன. அவன் மனைவி அவனை அண்டி அமர்ந்தாள். விழிகளின் கல்க்கத்தைத் தடுக்க மாட்டாமல், அவள் கணவனின் நெற். ஹியைத் தொட்டுப் பார்த்தாள். ‘அத்தான்; இவுங்க தான்..” என்று சொல்ல ஆரம்பித்தாள். அதற்குள் அவனுக்கு வெட்டி வெட்டி இடதுகையும். வலது காலும் இழுக்கத் தொடங்கிவிட்டன.