பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

44 சுதர்சன் அமர்ந்தது அமர்ந்த நிலையில் நாற்காலியில் கிடந்தார்.அவர் மனம் எங்கோ ஓடியது; விரல்கள் தவழ்ந்து கிடந்த பத்திரிகைகளின் பக்கங்களைப் புரட்டின. அதன் ஒரு பகுதியில் எழுதப்பட்டிருந்த குறிப்பு ஒன்றைக் கண் ணுேட்டமிட்டார் அவர். 'எழுத்தாள ஜோடி என்று பெயர் பெற்ற சுதர்சன்சாந்தினி தம்பதிகளில் திருமதி சாந்தினி அவர்கள் உயிர் நீத் தார் என்பதறிந்து மிகவும் வருந்துகிருேம். அவரது ஆத்மா சாந்தி பெறப் பிரார்த்திக்கிருேம்.” சுதர்சன்-சாந்தினி எழுத்தாள தம்பதிகளாக வாய்த் தது-நிகழ்ந்தது கதைபோல; அது உண்மைச் சம்பவம். அன்று சுதர்சன், ஆசிரியர் வேண்டுகோள் விடுத்திருத்த, பத்திரிகை ஆண்டு மலருக்குக் கதை எழுதி முடித்து விட்டு, நீட்டி முழக்கி உடம்பை நெளித்துக் கொண்டார். அப் பொழுது அவர் பெயருக்குக் கடிதம் ஒன்று வந்தது. * லாவண்யா என்ற எழுத்தாளரிடமிருந்து வந்திருந்தது அக் கடிதம். அதில்தான் சுதர்சனக் காணப் பெரும் ஆவல் கொண்டு துடிப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது கண்டு சுதர்சனுக்குப் பெருமிதம் பொங்கியது. ஒரே துறையில் இருப்பவர்கள் அறிமுகமாகிச் சந்திப்புக்கள் பரிமாறிக் கொண்டால் எழுத்துலகில் இலக்கியம் பற்றிய அபிப்பிரா யங்களையும் பரிவர்த்தனை செய்து கொள்ளும் வாய்ப்பு கிட் டும். அத்துடன், லாவண்யா' எழுதி வரும் கதைகள் சுதர்சனின் இதயத்தில் நல்ல இடம் பெற்றிருந்தன. சொல்லி வைத்தாற்போல அவர் கதைகள் வெளிவரும் ஒவ்வொரு இதழிலும் ஜோடியாக லாவண்யாவின் கதைகளும் இடம் பெற்ற விந்தையை என்னவென்று கூறுவது? சந்தர்ப் பங்களா... ...? - அவள் குறிப்பிட்ட வண்ணம் ராபின்ஸன் பார்க்கில் சந் திக்கப் புறப்பட்டார் சுதர்சன். லாவண்யா என்ற பெயர் நொடியில் திகைக்க வைத்தது. ஒருவேளை அந்தப் எழுதுவது நிஜமாகவே பெண்ணுக இருந்து விட்