பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தம்பிக்கோட்டை வீச்சரிவாள் அங்காளம்மன் திருச் சந்நிதானத்தில் பவளக்கொடி யின் கழுத்தில் திருப்பூட்டின்ை சோலையப்பன். தன்னைத் தானே ஒருமுறை குனிந்து:நோக்கிக்கொண்டான் அவன்; மகிழ்ச்சியின் சதங்கையொலி ஆனந்தப்பண் கூட்டிற்று, மணமாலே நெடி ஏறியது. அது அவனுக்கு வாகை மாலை யெனக் காட்சி தந்தது. பவளக்கொடியின் பவள நூத விடைப் பளிச்சிட்ட திலகத்தில் மங்கல நாண் நகை சிந் தியதோ? மெய்ம் மறந்திருந்த அவன் கணப் பொழுதை இடையோடவிட்ட பிறகு, அம்பிகையின் சபைமுன் விழுந்து வணங்கினன். குங்குமமும் திருநீறும் அவனுக்கு வாழ்த்துக் களைச் சீராகக் கொடுத்தன போலும்! பவளம்.!...” ஊம்!...” 'பயணம் கட்டுவமா? சொல்லு புள்ளே!” 'ஒ' வேதனையை உள்ளடக்கிக் கொண்டவண்ணம் வெளி வந்தது குறுஞ்சிரிப்பு; அவள் நெடுமூச்செறிந்தாள். கரங்கள் சிரம் ஏற, சிரம்தாழ்ந்தாள். ஆத்தா மூத்தவளே! எங்களுப் பலிச்சிருச்சு எல்லாம் நீ ஏத்திவச்ச வெளக்கேதான்!” சோலையப்பனும் பவளக்கொடியும் இதயத்தோடு இதயம் பிணத்துக் கொண்டவர்கள்; ஆகவே, கையொடு கை சேர்த்து, களி நடம் புரிந்தவாறு புறப்பட எத்தனம் செய்தார்கள். பத்து நாழிகைப்பொழுது என்ருலும், கோடை வெய்யில் கொளுத்தியது. அது தருணம், யாரோ ஒருவன் விசை பாய்ச்சி, வத் தான்; வேர்வை புனலானது; பதட்டம் வாயசைவில் கணித்