பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/60

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

83 என் சீக்குக் குணப்படவா? ஏன்? யாருக்காக? ஆமாம்; என் உடம்பு சீக்கிரமே தேற வேண்டுமென்று அல் லும் பகலும் அனவரதமும் கவலைப்பட்டு உருக்குலைந்த நிலைகுலைந்த, சீர்குலைந்த காலமும் ஒன்று இருந்தது வாஸ் தவம்தான்.அது அன்று! என்ருே ஓர் நாள்.ஆனல் இன்றல்ல; இனி என்றுமே இல்லை. இனி என் தேகம் சுகமடைய வேண் .டவே வேண்டாம். சுகப்பட்டு, என் கண்முன் என் வீட்டில் என்னைக் கைப்பிடித்தவர் இன்னுெருத்தியுடன் நடத்தப் போகும். காதல் நாடகத்தை இந்த ஜன்மத்தில் இந்தக் கண் களால் நான் பார்த்துக் கொண்டிருக்கவா? ஊஹூம்; ஒருக்காலும் மாட்டேன். அதற்குள் என் உயிர் உடலேவிட் டுப் பிரிந்துவிடும். மங்களம் என்று எனக்கு எந்த வேளையில் பெயர் வைத்தார்களோ என் வாழ்வு அமங்களமாக முடியப் போகிறது!’ என்று பித்துப்பிடித்தவளைப் போலக் கத்தி னேன். - மறுபடியும் இருமல் வந்து விட்டது. ரத்தமும் சளியு. மாகத் தட்டு நிரம்பியது. இருமிய வேதனை கண்ணிருக்கு வழிவகுத்தது. ஐயோ. தலையணையில் சாய்ந்து கொண் டேன். கமலாவைப் பார்த்தேன். அவள் கண்களில் கண் ரீைரைக் கண்டேன். அக்கா’ என்று என்னே அப்படியே கட்டிக் கொண்டு என் தலையை மிருதுவாகத் தடவிக் கொடுத்தாள். இரவு வளர்ந்தது; பிறை நிலா விண்ணில் சிலம்பம் பழகிக் கொண்டிருந்தது. மின்னும் நட்சத்திரங்களுடன். ஊதல் காற்று வேறு. . கமலம்'

  • அக்கா'

பார்த்தாயா, இன்னும் அவர் வீட்டுக்கு வரவில்லை. கொண்ட மனைவி குல உயிராக காய்ச்சலில் எமனுடன் போராடிக் கொண்டு சாகக் கிடக்கிருளே என்ற கவலை துளி யாவது அவருக்கு இருந்தால் இப்படி அவர் வீட்டை மறந்து என்னையே மறந்து இருப்பாரா...?’’