பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/11

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ix

ஆண்டான் செகாவ் முதலானோரின் படைப்புகளைச் சிறிது காலத்திலேயே படித்து முடித்தார். அவை எழுந்த காலப்பின்னணி சமுதாயக் கொடுமைகள் அடக்கு முறைகள் துன்ப துயரங்கள் நிரம்பியது. எனவே இயல்பாகவே அலக்ஸி இடர்ப்பட்ட மக்கள் பக்கம் நின்றார்.

சோஷலிச கம்யூனிச கருத்துகள் ஐரோப்பிய நாடுகள் முழுவதிலும் பரவி உறக்கத்தில் ஆழ்ந்திருந்த மக்களைத் தட்டி எழுப்பின.

ரஷ்யாவை ஆண்ட ஜார் மன்னன் மக்களுக்குக் கொடுமை இழைப்பதை ஒரு பெருமையாகவே கருதினான். எதேச்சதிகாரமும் கொடுங்கோன்மையும் அடக்குமுறையும் ஜார் மன்னனுக்கு கைவந்த கலை.

இலக்கிய வாசிப்பு படிப்பு - பயிற்சி அவருடைய அறிவைக் கூராக்கியது. சிந்தனையை விரிவாக்கியது. அவரும் எழுதத் தொடங்கினார்.

இதற்கு முன் தன் வாழ்க்கையில் நேரிட்ட துன்பதுயரங்களையும் இழிவுகளையும் நினைத்துத் தற்கொலை செய்துகொள்ள முயன்றார். உடலில் குண்டு பாய்ந்தும் பிழைத்துக்கொண்டார். பின் பல வேலைகளில் உழன்று, 1889 ஆம் ஆண்டு மாஸ்கோ சென்று லியோ டால்ட்டாயைச் சந்திக்க முடியாமல் திரும்பினார். கொரலென்கொ என்னும் புகழ்மிக்க எழுத்தாளரைச் சந்தித்துத் தாம் எழுதிய கவிதையைப் பரிசீலிக்கத் தந்தார், 1891-ஆம் ஆண்டு ரஷ்யநாடு முழுவதும் முக்கிய இடங்களுக்குச் சுற்றுப்பயணம் செய்து வந்தார். இடையில் அவருடைய “கன்னியும், மரணமும்” என்னும் கவிதை வெளிவந்தது. தொடர்ந்து பல கவிதைகளும் சிறுகதைகளும் புதினங்களும் எழுதினார். அவருடைய பெயரும் மக்சிம் கார்க்கி என்றாயிற்று. இதுவே உலகம் முழுவதும் புகழ்பெற்று நிலைபெறுவதாயிற்று, கார்க்கி என்பதற்குக் கசப்பு என்பது பொருள்.

1896ஆம் ஆண்டு அச்சுப்பிழை திருத்துவதில் துணைவராக இருந்த ஏகடரினா பவ்லோவ்னா வால்ழினா