பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/206

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

189


உங்களை வேவு பார்த்துத் திரிந்தான் என்பது எல்லோருக்கும் தெரிந்தது தானே...”

தாய் திடுக்கிட்டு நின்றாள். அவள் தொண்டை அடைத்தது. தன் நெஞ்சை ஒரு கையினால் அழுத்திப் பிடித்துக்கொண்டாள்.

“அதனால் என்ன? வீணாகப் பயப்படாதே, அவனுக்கு இந்தக் கதி கிடைத்தது ரொம்ப சரி. சீக்கிரம் வா. இல்லையென்றால் அவர்கள் உடலை அப்புறப்படுத்திவிடுவார்கள்” என்றாள் மரியா.

நிகலாய் வெஸோல்ஷிகோவைப் பற்றிய சந்தேகம் தாயினது கால்களைப் பின்னுக்கு இழுத்து நிறுத்துவதுபோல் தோன்றியது.

“அவன்தான் அவன் இவ்வளவு தூரத்துக்குப் போய்விட்டான?” என்று தனக்குள் நினைத்துக்கொண்டாள் தாய்.

தொழிற்சாலை மதில் சுவர்களுக்குப் பக்கத்தில், சமீபத்தில்தான் எரிந்து சாம்பலாய்ப் போய் மூளியாய் நின்ற ஒரு வீட்டுக்குப் பக்கத்தில், ஒரே கூட்டமாக ஜனங்கள் நின்று கொண்டிருந்தார்கள். தேனீக்களைப் போல இரைந்துகொண்டும், எரிந்து கருகிப்போன மரக்கட்டைகளின் மீது ஏறி நடந்துகொண்டும், சாம்பல் குவியலைக் கிளறிக்கொண்டும் ஜனங்கள் மொய்த்தனர். அங்கு எத்தனையோ பெண்களும், குழந்தைகளும், கடைக்காரர்களும், சாரயக்கடைப் பையன்களும், போலீஸ்காரர்களும் நின்றுகொண்டிருந்தார்கள். அவர்களோடு மார்பகம் நிறைய மெடல்களும், அடர்ந்து சுருண்ட வெள்ளி நிறத் தாடியும் கொண்ட உயரமான கிழவன் மூமூ அரசியல் போலீஸ்காரன் ஒருவனும் நின்றுகொண்டிருந்தான்.

பாதியுடம்பு தரையில் கிடந்தவாறும் பாதியுடம்பு உட்கார்ந்த பாவனையிலும் இஸாய் கிடந்தாள். அவனது முதுகு ஒரு கருகிப்போன கட்டையின்மீது சாய்ந்திருந்தது. தலை வலது தோளின் மீது சாய்ந்து சரிந்துகிடந்தது. வலது கை, கால்சராய்ப் பைக்குள் புகுத்தப்பட்டவாறு இருந்தது. இடது கரத்தின் விரல்கள் மண்ணையள்ளி இறுகப் பிடித்திருந்தன.

தாய் அவனது முகத்தைப் பார்த்தாள், நீண்டு பரந்துகிடக்கும் அவனது கால்களுக்கிடையே கிடக்கும் தொப்பியை வெறித்துப் பார்ப்பதுபோல் அவனது ஒரு கண் பிதுங்கி நின்றது. வாய் ஏதோ வியப்புற்றதுபோல் பாதி திறந்து தொங்கியது. அவனது சிவந்த தாடி ஒரு புறமாகச் சாய்ந்து ஒட்டி நின்றது. மெலிந்த உடம்பும் குறுகிய தலையும் புள்ளி விழுந்த ஒட்டிய முகமும் மரணத்தினால் மேலும் குறுகிச் சிறுத்துவிட்டதுபோலத் தோன்றின. தாய் தனக்கு நேராகக்