பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/28

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

11


நெறித்துப் போன புருவங்களோடும் அவன் கிடந்தான். அவனது மனைவியும் மகனும் நாயுமாகச் சேர்த்து அவனைப் புதைத்தார்கள். பழைய திருட்டுப் புள்ளியும் தொழிற்சாலையிலிருந்து நீக்கப்பட்ட குடியாரத் தொழிலாளியுமான தனிலோ வெஸோவ்ஷிகோவும், அந்தக் குடியிருப்பிலுள்ள சில பிச்சைக்காரர்களும் அந்தச் சவ அடக்கச் சடங்கில் கலந்து கொண்டார்கள். அவனது மனைவி கொஞ்ச நேரம் அழுதாள், அமைதியாக அழுதாள். பாவெல் அழவே இல்லை. தெரு வழியே சென்ற அவனது சவ ஊர்வலத்தைக் கண்ட ஜனங்கள் சிறிது நேரம் நின்று குறியிட்டபடி தம்முள் பேசிக்கொண்டார்கள்.

“பெலகேயாவுக்கு இவன் செத்ததே ஒரு கொண்டாட்டம்தான்!”

“அவன் சாகவா செய்தான்? நாய் மாதிரி அழுகிப்போனான்!”

சவப்பெட்டியைப் புதைத்துவிட்டு, ஜனங்கள் போய்விட்டார்கள். ஆனால் நாய் மட்டும் அந்த கல்லறையை முகர்ந்தபடி, புது மண்ணில் மெளனமாக உட்கார்ந்திருந்தது. சில நாட்கழித்து யாரோ அதை அடித்துக் கொன்றுவிட்டார்கள்.

3

தந்தை காலமாகி இரண்டு வாரங்களுக்குப் பிறகு ஒரு ஞாயிற்றுக்கிழமையன்று பாவெல் விலாசவ் மூக்கு முட்டக் குடித்துவிட்டு வீடுவந்து சேர்ந்தான். வீட்டுக்குள் தள்ளாடித் தடமாடி நடந்தான்: மேஜை மூலையிலிருந்த ஆசனத்தை நோக்கித் தொட்டுத் தடவி நகர்ந்து சென்றான்; தன் அப்பன் செய்தது போலவே மேஜைப் பலகை மீது முஷ்டியால் ஓங்கிக் குத்தியவாறு தன் தாயைப் பார்த்துச் சத்தமிட்டான்.

“கொண்டா சாப்பாடு!”

அவனது தாயோ தன் மகனுக்கருகே வந்து உட்கார்ந்தாள். தன் கரங்களால் அவனை அணைத்து அவனது தலையைத் தன் மார்பகத்தில் புதைத்துக்கொண்டாள். அவனோ அவளை விலக்க முயன்றான்.

“அம்மா, கொண்டா சீக்கிரம்!”

“முட்டாள் பயலே!” என்று தாய் கவலையோடும் அன்போடும் அவனது கையை விலக்கிக்கொண்டே சொன்னாள்.

“நான் புகை பிடிக்கவும் போகிறேன். அப்பாவின் குழாயை எடுத்துக் கொடு” என்று சொல்லுக்கு வளையாத நாக்கினால் குழறினான் பாவெல்.

அவன் குடித்துவிட்டு வந்தது இதுதான் முதல் தடவை. ஓட்கா அவனது உடம்பைத் தளர்வுறச் செய்திருந்தது. எனினும் அவனது