பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/338

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

322

மக்சீம் கார்க்கி


கொண்டவன். அழகானவன்; ஆனால் மிகுந்த அழுத்தமும் அடக்கமும் கொண்ட ஆசாமி. ரமான் பெத்ரோவிச் — பருக்கள் நிறைந்த உருண்ட முகத்தை உடையவன்: எதற்கெடுத்தாலும் கசந்துபோய் நாக்கை அடிக்கடி சப்புக் கொட்டுவான். இவான் தனீல்விச்—மெலிந்து ஒடுங்கிய குள்ளப் பிறவி. கூரிய தாடியும் மெலிந்த குரலும் உடையவன்; அவசரமாக கீச்கீச்சென்றும் குத்தலாகத் துளைத்துத்துளைத்தும் பேசுவான். இகோர்மூமூ இவன் தன் உடம்பிலே வளர்ந்துவரும் நோயை நினைத்தும், தன் தோழர்களைப் பார்த்தும், தன்னைப் பார்த்ததுமே எப்போதும் சிரித்த வண்ணமாயிருப்பான். எங்கெங்கோ தூரத்தொலை நகரங்களிலிருந் தெல்லாம் பலரும் அங்கு வந்து போவதுண்டு. நிகலாய் அவர்களோடு நெடுநேரம் அமைதியாகப் பேசுவான். ஆனால் அவன் பேசுவதோ ஒரே ஒரு விஷயத்தைப் பற்றித்தான்—உலகத் தொழிலாளி மக்கள் பற்றித்தான்! அவர்கள் விவாதிப்பார்கள்; விவாத வேகத்தால் உத்வேகம் பெற்றுக் கைகளை ஆட்டிக்கொள்வார்கள்; அமிதமாகத் தேநீர் பருகுவார்கள். ஒரு புறத்தில் அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே நிகலாய் என்னென்ன அறிக்கைகள் வெளியிட வேண்டும் என்பதை யோசித்து எழுதுவான். பிறகு அவற்றைத் தன் தோழர்களிடம் வாசித்துக் காட்டுவான், அவர்கள் உடனே அந்த அறிக்கையினைப் பிரதி எடுத்துக்கொள்வார்கள்; அதன் பிறகு அவனால் கிழித்துப் போடப்பட்ட நகல் காகிதப் பிரதிகளின் துண்டு துணக்குகளையெல்லாம் பொறுக்கியெடுத்து அவற்றை எரித்துப் பொசுக்கிவிடுவாள் தாய்.

அவர்களுக்குத் தேநீர் பரிமாறும்போதே தாய் அவர்களைப் பார்ப்பாள்; தொழிலாளி மக்களின் வாழ்க்கைப் பற்றியும், விதியைப் பற்றியும். அவர்களுக்கு எப்படி உண்மையை மேலும் சிறப்பாகவும் விரைவாகவும் உணர்த்தி, அவர்களது உள்ளங்களை ஒன்றுபட்டு ஓரணியில் நிற்கச் செய்வது என்பதைப் பற்றியும் அவர்கள் உற்சாகத்துடன் பேசுவதைக் கண்டு தாய் வியப்படைவாள். அவர்கள் அடிக்கடி கோபாவேசமடைந்து பல்வேறு அபிப்பிராயங்களையும் ஆதரித்துப் பேசுவார்கள்; ஒருவரையொருவர் கடுமையாகவும் கண்டிப்பாகவும் குறை கூறிக்கொள்வார்கள், ஒருவருக்கொருவர் மனம் புண்படும்படி பேசுவார்கள்; காரசாரமாக விவாதிப்பார்கள்.

அவர்கள் அறிந்துகொண்டதை விட... தொழிலாளர்களின் வாழ்க்கையைப் பற்றித் தனக்கே அதிகம் தெரியும் என்று உணர்ந்தாள் தாய். அவர்கள் ஏற்றுக்கொண்டுள்ள பணியின் மகத்துவத்தை அவர்களைவிடத் தானே தெள்ளத் தெளிவாகக் காண்பது போல அவளுக்குத் தோன்றியது. இந்த உணர்ச்சியால், கணவன்,