பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/46

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

தாய்

29


வளர்ப்புத் தாயின் நெற்றியிலும் இதைப்போலவே ஒரு வடு இருந்தது. அவள் யார் கூட வாழ்ந்தாளோ அந்த மனுஷன் கொடுத்தது அது. அவன் செருப்புத் தைக்கிறவன். அவளை ஒரு இரும்புத் துண்டால் அவன் அடித்துவிட்டான். அவள் துணி வெளுக்கிறவள்; அவனோ செருப்பு தைக்கிறவன். அவள் என்னைத் தன் மகனாக ஸ்வீகாரம் செய்துகொண்டபின் அவனை எங்கேயோ பிடித்திருக்கிறாள். அவளது தொலையாத துயரத்துக்கு கேட்க வேண்டுமா; அவனோ ஒரு விடாக் குடியன்; அவன் எப்படி அவளை அடிப்பான் தெரியுமா? அவன் அடிக்கிற அடியில், பயத்தால் என் தோல் விரிந்து பிய்வதாகத் தோன்றும்.

அவனது வெகுளித்தனமான பேச்சு தாயைச் செயலற்ற வளாக்கியது. தான் அவனிடம் கடுப்பாகப் பேசியதற்கு பாவெல் தன்மீது கோபப்படுவானோ என்று அவள் பயந்தான்.

“நான் ஒன்றும் நிஜமாகக் கோபப்படவில்லை” என்ற ஒரு குற்றப் புன்னகையுடன் சொன்னான் அவன். “ஆனால், நீங்கள் திடீரென்று என்னை இப்படிக் கேட்டுவிட்டீர்கள். எனக்கும் என்னைக் கட்டியவரால்தான் இந்தக் காயம் ஏற்பட்டது. அவரது ஆன்மா சாந்தியடையட்டும். சரி நீங்கள் என்ன தாத்தாரியா?[1]

அவன் தன் கால்களை ஆட்டிக்கொண்டே சிரித்தான். அந்தச் சிரிப்பால் அவனது காதுகள்கூட அசைவது மாதிரி தோன்றியது. ஆனால் மறுகணமே அவன் தன்னைச் சுதாரித்துக் கொண்டான்;

“இல்லை. நான் இன்னும் அப்படியாகவில்லை!”

“ஆனால், உங்கள் பேச்சு ருஷிய பாஷை மாதிரியே ஒலிக்கவில்லை” அவன் சொன்ன ஹாஸ்யத்தை அனுபவித்தது. சிறு புன்னகை செய்துகொண்டே சொன்னான் அவன்.

“ஆமாம். ருஷ்ய பாஷையைவிட இது மேலானது” என்று உற்சாகத்தோடு சொன்னான் அந்த விருந்தாளி, “தான் ஒரு ஹஹோல்”[2] கானேவ் நகரப் பிறவி”.

“இங்கே வந்து ரொம்ப நாளாச்சோ?"


  1. பழந் துணிகளை வாங்கிப் பிழைக்கின்றவர்களை ‘தாத்தாரியன்’ என்று சொல்லுவதுண்டு–மொ-ர்
  2. ஹஹோல் - உக்ரேனியப் பிரதேச மக்களுக்கு, ருஷ்யர்கள் இட்டுள்ள கேலிப் பெயர். (கதை முழுவதிலும் ஹஹோல் என்ற சொல் அந்திரேயையே குறிக்கிறது. எனவே அந்திரேய் என்பதும் ஹஹோல் என்பதும் ஒருவரே.)–மொ-ர்