பக்கம்:தாய், மக்சீம் கார்க்கி.pdf/49

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

32

மக்சீம் கார்க்கி


ஒருவேளை அவள் கீவ் நகரத் தெருக்களில் பிச்சையெடுத்துத் திரிந்து கொண்டிருக்கிறாளோ என்று எண்ணுகிறேன், பிச்சையெடுப்பதும், ஒட்கா குடிப்பதும்... அவள் குடித்திருக்கும்போது, போலிஸார் அவள் முகத்தில் ஒங்கியறையவும் கூடும்:... “

“உம். என் அருமைப் பையனே!” என்று பெருமூச்சுவிட்டபடி நினைத்துக் கொண்டாள் தாய்.

நதாஷா விரைவாகவும் மென்மையாகவும், உணர்ர்ச்சி மயமாகவும் ஏதோ பேசினாள். மீண்டும் அந்த ஹஹோல் பேச ஆரம்பித்துவிட்டான்.

“நீங்கள் இன்னும் சின்னப்பிள்ளை, உங்களுக்கு உலக ஞானம் போதாது. உலகத்துக்குள் ஒரு மனிதனைக் கொண்டு வருவதே சிரமம். அவனை நல்லவனாக வாழச் செய்வது அதை விடச் சிரமம்!”

“என்னமாய்ப் பேசுகிறான்!” என்று தனக்குத்தானே வியந்துகொண்டாள் தாய். அந்த ஹஹோலிடம் ஏதாவது அன்பான வார்த்தையாகப் பேசிவிட வேண்டும் என்ற உணர்ச்சி அவளுக்கு ஏற்பட்டது. ஆனால் திடீரெனக் கதவு திறக்கப்பட்டது. உள்ளே பழைய திருட்டுப்புள்ளியான தனிலோலின் மகன் நிகலாய் விஸோவ்ஷிகோல் வந்து சேர்ந்தான். நிகலாய் மனிதரை அண்டி வாழாத தனிக் குணத்தால் அந்தக் குடியிருப்பு முழுவதிலுமே பிரபலமான புள்ளி. அவன் எப்போதுமே யாரிடமும் ஒட்டிப் பழகுவதில்லை: எட்டியே நிற்பான். எனவே மற்றவர்கள் அவனைக் கேலி செய்து வந்தனர்.

“ஊம். என்னது நிகலாய்!” என்று வியப்புடன் கேட்டாள் அவள்.

அவளுக்கு வணக்கம் கூடக் கூறாமல், அம்மைத் தழும்பு விழுந்த தனது அகலமான முகத்தை உள்ளங்கையால் துடைத்துவிட்டுக்கொண்டு வறட்டுக் குரலில் கேட்டான் அவன், “பாவெல் இல்லையா!”

“இல்லை ”

அவன் அந்த அறையை ஒரு பார்வை பார்த்துவிட்டு உள்ளே நுழைந்தான்.

வணக்கம். தோழர்களே!” என்றான் அவன்.

“இவனும் கூடவா?” என்று வெறுப்புடன் நினைத்தாள் தாய். “ நதாஷா கொஞ்சமாயும், மகிழ்ச்சியுடனும் கரம் நீட்டி அவளை வரவேற்றது அவளுக்குப் பேராச்சரியம் விளைத்தது.

நிகலாயிக்குப் பின்னர் வேறு இருவர் வந்தனர். அவர்கள் இருவரும் பருவம் முற்றாத வாலிபர்கள். தாய்க்கு அவர்களில் ஒருவனைத் தெரியும். கூர்மையான முகமும் சுருண்ட தலை மயிரும்,